தாவரவியல் :: வேர்

1. தாவர உடலிலுள்ள இரு தொகுதிகள் யாவை?
1. தண்டுத் தொகுதி.
2. வேர்த்தொகுதி.
2. வேர்த்தொகுதியிலுள்ள பகுதிகள் யாவை?
ஆணி வேர், சல்லி வேர்கள், வேர்த்துவி.
3. வேரின் இயல்புகள் யாவை?
1. ஈர்ப்பு நோக்கி இருட்டில் வளர்வது. தாவரத்திசுவிற்கு நிலைப்பு அளிப்பது.
2. ஊட்டநீரை உறிஞ்சித் தண்டுகளுக்கு அனுப்புவது.
3. மாற்றுரு பெறுவது.
4. வேர்த்துவிகள் என்பவை யாவை?
வேரின் முடிவுறுப்புகள். மண்ணிலிருந்து ஊட்டநீரை உறிஞ்சி வேர்களுக்கு அளிப்பவை.
5. வேர் மாற்றுரு என்றால் என்ன?
இயல்பான வேலைகளைத் தவிரச் சேமிப்பு முதலிய சிறப்பு வேலைகளைச் செய்ய வேர் தன் உருவில் மாற்ற மடைதல். இதில் ஆணி வேரும் வேற்றிட வேரும் தம் உருவில் மாற்றம் அடைகின்றன.
6. இதன் முதன்மையான இரு வகைகள் யாவை?
1. ஆணிவேர் மாற்றுருக்கள் - கேரட்
2. வேற்றிட வேர் மாற்றுருக்கள் - தண்ணtர் விட்டான் கிழங்கு.
7. ஆணிவேர் மாற்றுருக்கள் யாவை?
1. கூம்பு வடிவம் - கேரட்
2. கதிர் வடிவம் - முள்ளங்கி.
3. கூர் வடிவம் - பீட்டுக்கிழங்கு.
8. வேற்றிட வேர் மாற்றுருக்கள் யாவை?
1. கொத்துவேர் - தண்ணிர் விட்டான்கிழங்கு
2. முடிச்சுவேர் - மாங்காய் இஞ்சி.
3. அங்கை வடிவ வேர் - ஏப்னேரியா.
4. மணிமாலை வடிவ வேர் - டயஸ்கோரியா.
5. தூண்வேர் - ஆலம்விழுது.
6. பற்றுவேர் - மரத்தாழை.
7. மூச்சுவேர் - கண்டல்.
8. ஒளிச்சேர்க்கை வேர் - டேனியோபில்லம்.
9. முட்டுவேர் - தாழை.
9. உண்ணக்கூடிய ஆணிவேர்க் கிழங்குகள் யாவை?
கேரட் பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு.
10. தூண்வேர் என்பது யாது?
ஆலமரக் கிளையைத் தாங்கும் ஆலம் விழுது. காற்றில் தொங்குவது.இது ஒரு வேற்றிட வேர். தண்டுக்குக் கூடுதல் தாங்குதல் அளிப்பது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேர் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வேர், யாவை, மாற்றுருக்கள், வேற்றிட, வடிவம், கேரட்