தாவரவியல் :: இனப்பெருக்கம்
21. ஒட்டுதல் என்றால் என்ன?
உறுப்பு இனப்பெருக்க முறைகளில் ஒன்று. இரு தாவரச் செடிகளைச் சேர்த்து ஒரு புதிய செடியை உண்டாக்கலாம். எ-டு. மா, கொய்யா. விரைவான வளர்ச்சியை உண்டாக்குவது.
22. ஒட்டின் வகைகள் யாவை?
1. தண்டு ஒட்டு - மா.
2. மொட்டு ஒட்டு - ரோஜா.
3. அரும்பொட்டு - கொய்யா.
23. அரும்பு என்றால் என்ன?
பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவரநீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும்.
24. அரும்பின் பல வகைகள் யாவை?
1. கோண அரும்பு.
2. நுனியரும்பு.
4. மருங்கு அரும்பு.
5. உறையரும்பு.
6. மாறியரும்பு.
25. அரும்புதல் என்றால் என்ன?
மொட்டுவிடுதல். பாலில்லா இலைபெருக்க முறைகளில் ஒன்று.
26. அரும்பொட்டு என்றால் என்ன?
உறுப்பு இனப்பெருக்கம். கலவி இல்லை. இதில் திட்டமிட்டபடி ஒர் அரும்பு விலக்கப்பட்டு மற்றொரு தாவரத்தின்மீது ஒட்டப்படுகிறது. எ-டு. ஆப்பிள், கிச்சிலி.
27. வெட்டிநடுதல் என்றால் என்ன?
போத்து நடுதலான விதையிலா இனப்பெருக்கம் சார்ந்தது. எ-டு கிளுவை, பூவரசு.
28. உறுப்பு வளர்ப்பு என்றால் என்ன?
நறுக்கப்பட்ட கருக்கள், இலைகள், வளர்திசு, வேர் ஆகியவற்றைத் தகுந்த கரைசலில் வளர்த்தல்.
29. துண்டாதல் என்றால் என்ன?
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம். பல பகுதிகளாக உடல் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல், எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - மலேரியா ஒட்டுண்ணி.
30. கருமுட்டை (ஒவம்) என்றால் என்ன?
பெண் பாலணு. தாய் முட்டையிலிருந்து குன்றல் பிரிவு மூலம் உண்டாவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனப்பெருக்கம் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அரும்பு, இனப்பெருக்கம், உறுப்பு