தாவரவியல் :: தாவர உயிரி தொழில்நுட்பவியல்

31. நெல் மீன் பண்ணை என்றால் என்ன?
பண்ணையில் ஒரு வகை. வேறுபட்ட பயிரிடலை அனு மதிப்பது. முதலீட்டு இடர்களைக் குறைப்பது. மழை யுள்ள தாழ்நிலைச் சாகுபடியில் இச்செலவு குறையும். சூழ்நிலைத் தொகுதியைப் பாதுகாப்பது.
32. அனைத்துலகப் பயிர் அறிவியல் பேரவையின் சிறப்பென்ன?
முதல் பேரவை 1992இல் அமெரிக்காவில் நடந்தது. உலகின் சிறந்த 222 அறிவியலார் இதில் கலந்து கொண்டு 100 ஆராய்ச்சி உரைகள் வழங்கினர். சூழ்நிலையின் எல்லா நிலைகளும் ஆராயப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இப்பேரவையில் மேற் கொள்ளப்பட்டன.
33. வேம்புப்பொன் என்றால் என்ன?
நல்ல பயன் தரும் சூழ்நிலைத்தகவுள்ள தொற்றுக் கொல்லி. வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேரா. கோவிந்தாச்சாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கியது. (1994)
34. தேசிய வேளாண்அறிவியல் பேரவை என்பது யாது?
இந்திய வேளாண் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 2ஆம் மாநாடு அய்தராபாத்தில் 1995 ஜனவரியில் நடந்தது. இதன் தலைமை உரை வேளாண் அறிஞர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களால் நிகழ்த்தப் பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவர உயிரி தொழில்நுட்பவியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -