தாவரவியல் :: தாவர உயிரி தொழில்நுட்பவியல்
11. இதனால் உருவாக்கப்பட்ட பயிர்கள் யாவை?
பருத்தி, மக்காச்சோளம், சோயா அவரை, அரிசி. இவை 40 பில்லியன் ஹெக்டேர்களில் உலகம் முழுதும் பயிரிடப்படுகின்றன.
12. அமெரிக்க வேளாண்துறை வழங்கிய முதல் உரிமம் யாது?
1986இல் முதன்முதலாக ஒர் உரிமம் வழங்கிற்று. இதன்படி மரபாக்க முறையில் உருவாக்கப்பட்ட ஒரு உயிரி விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இந்த உயிரி ஒரு நச்சியம் ஆகும். இது ஒர் ஆவைனாகப் பயன்படுத்தப் பட்டதால், பன்றியில் தோன்றும் அக்கியைத் தடுத்தது.
13. எளிய உயிரி தொழில்நுட்பத்திற்கு ஒர் எடுத்துக்காட்டுத் தருக.
உயிரி உரங்களைப் பெருக்குதல்.
14. உயிரி உரங்கள் யாவை?
நீலப்பசும்பாசி (BGA), அசோலா, ரைசோயியம், அசோட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாசுவரக்குச்சி வடிவ உயிர். இவை விலைகுறைவு ஆற்றல்வளம் மிக்கவை.
15. ட்ரைகோடெர்மா விரிடி என்றால் என்ன?
இது ஒர் எதிர்ப்புப் பூஞ்சை. உழவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். இதை விதைகளோடு சேர்த்தால் போதும்: வேதிப்பொருள்கள் தேவை இல்லை.
16. பாசுமதி அரிசி எதிரிலிருந்து உருவாக்கப்பட்டது?
பாசுமதி 370லிருந்து உருவாக்கப்பட்டது.
17. பையோ 902 என்பது என்ன?
ஒரு கடுகுவகை. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இதை 1994இல் உருவாக்கியது. தாய் வகையான அருணாவை விட அதிக விளைவு கொண்டது இது.
18. பயிர்க்கட்டுப்பாட்டுக் காரணிகள் யாவை? இவற்றின் நோக்கம் என்ன?
இவை பூஞ்சைகள் ஆகும். எ-டு. பேசிலஸ் துரின்ஜியஸ். பயிர்ப்பாதுகாப்பிற்காகப் பயன்படுததப்படுபவை. பயிர் நோய்களை அழிப்பவை.
19. மரபணுமாற்றம் பெற்ற தாவரங்கள் யாவை?
தக்காளி, கரும்பு, அரிசி.
20. மரபணு மாற்றத் தாவரத் தொடர்பாகவுள்ள தேசிய அறிவுரைக் குழுவின் பரிந்துரை என்ன?
மரபணு மாற்றத் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று மைய அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது. மரபணு மாற்றம் பெற்ற உயிரிகள் பாதுகாப்பிற்காகவும் ஒழுக்க நிலைப் பாட்டிற்காகவும் இது தேவை என வற்புறுத்தியுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவர உயிரி தொழில்நுட்பவியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உயிரி, என்ன, யாவை, மரபணு, அரிசி