தாவரவியல் :: தாவர உயிரி தொழில்நுட்பவியல்
1. படியாக்கம் என்றால் என்ன?
ஓர் உயிர்ப்பொருளின் சரிநிகர் நகலை உருவாக்கல் படியாக்கம் எனப்படும்.
2. படியாக்கத்திலுள்ள நுட்பம் என்ன?
உயிரணுவிலுள்ள உட்கருமாற்றம் ஆகும்.
3. மறுபடியாக்கம் என்றால் என்ன?
மரபணுப் பொருளின் துல்லிய படிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவற்றின் நகல்களை எடுக்கலாம்.
4. ஆலன் வில்சன், கிரசல் ஹிகுசி ஆகிய இருவரும் செய்த அருஞ்செயல் யாது?
மறைந்தொழிந்த சிறப்பினங்களின் மரபணுக்களை 1984இல் படியாக்கம் செய்தனர்.
5. மரபணுப்படியாக்கம் (gene cloning) என்றால் என்ன?
இது ஒரு நுணுக்கம். இதில் பல ஒம்புயிரின் பொருள்களைக் கொண்டுள்ள பல ஆர்டிஎன்ஏக்கள் உண்டாகின்றன.
6. மரபாக்கத்தில் ஒம்புயிரிகளாகப் பயன்படும் நுண்ணுயிரிகள் யாவை?
1. ஈச்சரிசியா கோலி 2. ஸ்டெப்டோமைசிஸ் சிறப்பினங்கள்.
7. மரபாக்கத்திலுள்ள வேறுபட்ட படிநிலைகள் யாவை?
1. தருபவரின் டிஎன்ஏ பிரிக்கப்பட்டுத் துண்டுகளாக்கப் படுதல்.
2. இந்துண்டுகள் தகுந்த நுண்ணுயிர் ஒம்புயிருக்குள் ஈச்சரிசியாகோலி செலுத்தப்படுதல்.
3. படியாக்கம் உண்டாதல்.
4. தரும் டிஎன்ஏ துண்டுகளும் கடத்தும் டிஎன்ஏ துண்டுகளும் பிணைதல்.
5. மீன்கூடும் டிஎன்ஏ ஒம்புயிரியில் செலுத்தப்படுதல்.
8. மீள்கூடு தொழில்நுட்பம் என்றால் என்ன?
புதிய மரபணுக்களைச் செலுத்திப் புதிய பண்புகளை உண்டாக்குவதற்கு மீள்கூடு தொழில்நுட்பம் என்று பெயர். இதில் மீள்கூடு டிஎன்ஏ பயன்படுகிறது.
9. முதன்முதலில் உருவாக்கப்பட்ட உயிரிதொழில்நுட்ப இயல் உணவு யாது? எப்பொழுது?
பியூரி தக்காளி ஆகும். ஆண்டு 1996, இது வழக்கமாகக் காய்க்கும் தக்காளியை விட விலை குறைவு. இதற்கு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் விற்பனை ஒப்புதல் கிடைத்துள்ளது. மரபணு முறையில் மாற்றம் செய்யப் பட்டது. இது.
10. மரபணுத் தொழில்நுட்பம் என்றால் என்ன?
மரபணுக்களை மாற்றுவதன்மூலம் புதிய உயிர்வகை களை உருவாக்குதல்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவர உயிரி தொழில்நுட்பவியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - டிஎன்ஏ, என்ன, என்றால், படியாக்கம், தொழில்நுட்பம், மீள்கூடு