தாவரவியல் :: தாவரச் செயல்கள்
81. காரமங்கள் (ஆல்கலாய்டுகள்) என்றால் என்ன?
சில இரு விதையிலைத் தாவரங்களிலிலுள்ள அடிப்படைக் கரிமச் சேர்மங்கள், நைட்ரஜன் ஊட்டமுள்ளவை. எ-டு. மார்பைன்.
82. அடினைன் என்றால் என்ன?
பியூரைன் வழிப்பொருள். டி.என். ஏ ஆர்என்ஏ ஆகிய இரு வேதிப்பொருள்களிலும் உண்டு. காரப்பகுதிப் பொருள்.
83. அடினோசைன் என்றால் என்ன?
டிரிபோஸ் சர்க்கரை மூலக்கூறுடன் சேர்ந்துள்ள ஓர் அடினைன் மூலக்கூறு கொண்ட நியூக்கிளியோசைடு. அடினோசைனின் பாஸ்பேட்.
84. எஸ்தர் வழிப்பொருள்கள் யாவை?
1. அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட்
2. அடினோசைன் இரட்டைப்பாஸ்பேட் 3. அடினோசைன் முப்பாஸ்பேட்
85. இம்மூன்றின் சிறப்பென்ன?
இவை வேதியாற்றலைச் சுமந்து செல்வதால் உயிரியல் சிறப்புள்ளவை.
86. அகார்-அகார் என்றால் என்ன?
கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள். பல சர்க்கரைகள் சேர்ந்தவை.
87. இதன் பயன்கள் யாவை?
1. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்குவது. இக்கரைசல்களில் நுண்ணுயிரிகள் வளர்க்கப்படுகின்றன.
2. இது உணவுப் பண்டங்கள் செய்யவும் பயன்படுவது.
88. பால்சம் என்பது யாது?
ஒட்டக்கூடிய பிசின், இனிய மணம். ஆய்வகத்திலும் மருத்துவத்திலும் பயன்படுவது.
89. கனடா பால்சம் என்றால் என்ன?
மஞ்சள் நிறப் பாய்மம். நுண்ணோக்கியிலும் கண்ணாடி வில்லைகளை நிலைநிறுத்தவும் ஒளிக்கருவிகளுக்கு ஒட்டுப்பொருளாகவும் பயன்படுவது.
90. குறும்பொழுது தாவரம் என்றால் என்ன?
இது பூப்பதற்குப் பகல் ஒளி குறைவாக இருக்க வேண்டும். இந்த ஒளியின் கால அளவைக் குறைப்பதன் மூலம் இத்தாவரத்தை விரைவில் பூக்கச் செய்யலாம். எ-டு. புகையிலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அடினோசைன், பயன்படுவது