தாவரவியல் :: தாவரச் செயல்கள்
71. ஆந்தோசைனின் என்றால் என்ன?
குளுகோசைடு என்னும் தாவர நிறமி. தாவர உறுப்புகளுக்கு நிறமளித்தல் இதன் முதன்மையான வேலை.
72. கேஃபின் என்றால் என்ன?
காப்பி அவரையிலும் தேயிலைகளிலும் உள்ள பியூரின். பட்டுபோன்ற வெண்ணிறப் பொருள் இதயச் செயலை ஊக்குவிப்பது. பல மருந்துகளில் பயன்படுவது.
73. நாப்தலீன் அசெட்டிகக்காடி என்றால் என்ன?
இது ஒரு செயற்கை வளர் ஊக்கி. பூத்தலை ஊக்குவிப்பது.
74. நிக்கோடைன் என்றால் என்ன?
புகையிலையிலிருந்து கிடைக்கும் மிக நச்சுள்ள பொருள். செயற்கையாகவும் உண்டாக்கலாம்.
75. இதன் பயன்கள் யாவை?
1. பூச்சிக்கொல்லி.
2. கால்நடை மருத்துவத்தில் புற ஒட்டுண்ணிகளைக் கொல்வது.
76. அபின் என்பது யாது?
போதைப் பொருள். திருட்டுத்தனமாக வளர்க்கப்படுவது, கடத்தலப்படுவது. கசகசாச் செடியிலிருந்து கிடைப்பது.
77. பார்லி என்பது யாது?
கோதுமை போன்று ஸ்டார்ச் அதிகமுள்ள தானியம். பத்திய உணவு கஞ்சி வைக்கப் பயன்படுவது. புல்வகை.
78. பெருங்காயம் என்றால் என்ன?
பென்னல் குடும்பத் தாவரத்திலிருந்து பெறப்படும் பிசின். நரம்புக் கோளாறுக்குரிய மருந்துகளில் பயன்படுவது. சமையற்கலையில் நறுமணப் பொருள்களாகப் பயன் படுவது.
79. பிசின் என்றால் என்ன?
கோந்தின் தாவரப்பொருள். மாப்பொருள் ஊட்டம் உள்ளது.
80. பிசின் ஒழுக்கு என்றால் என்ன?
தாவரநோய். அதிகமாகப் பிசின் ஒழுகி மரப்பட்டையில் சேர்வது. கருவேலில் காணலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பிசின், பொருள், பயன்படுவது