தாவரவியல் :: தாவரச் செயல்கள்
61. நீர்க்கவர்ச்சி என்றால் என்ன?
நீரினால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை.எ-டு நீர்ப்பாசி.
62. நீர்வளர்ப்பியல் என்றால் என்ன?
மண்ணில்லாமல் வேதிக்கரைசலில் தாவரங்களை வளர்த்தல்.
63. நீர்த்தண்டு என்றால் என்ன?
நீர்விடும் புறத்தோல் உறுப்பு எ-டு சேனை.
64. நீர்ச்சொட்டல் என்றால் என்ன?
நீராவிப்போக்கு நடைபெறச் சாதகச் சூழ்நிலைகள் இல்லாதபொழுது, தாவரங்கள் துளித்துளியாக நீரை வெளித்தள்ளுதல்.
65. உதிர்தல் என்றால் என்ன?
தன் காம்பின் ஒரு பகுதி முறிவதால், பூஞ்சைச்சிதல் வெளியேறுதல். வளர்ச்சிப் பொருளின் (ஆச்சின்) அளவு குறைவதால் இலை, பூ, கனி முதலியவை விழுதல்.
66. சுருக்கம் என்றால் என்ன?
காம்பு சுருங்குவதால் அதிலிருந்து சிதல் வெளிப்படுதல்.
67. திவலை படிதல் என்றால் என்ன?
1. வேரழுத்தம் காரணமாக இலைகளில் நீர்த்துளிகள் தோன்றல்,
2. தாவர மேற்பரப்பலிருந்து நீர் இழப்பு ஏற்படுதல்.
68. உப்பல் என்றால் என்ன?
ஒரு பொருள் நீரை உறிஞ்சிப் பருத்தல்.
69. அம்மோனியா உண்டாதல் என்றால் என்ன?
பேசிலஸ்மைக்காய்டிஸ் முதலிய குச்சி வடிவ உயிர்களால் இறந்த கரிமப் பொருள்கள் சிதைக்கப்படும்பொழுது அம்மோனியா உண்டாகும்.
70. அம்மோனியாவாக்கும் குச்சி வடிவ உயிர்கள் என்றால் என்ன?
புரதத்தையும்வெடிவளி ஊட்டமுள்ள பொருள்களை யும் சிதைத்து அம்மோனியாவை உண்டாக்கும் இந் நுண்ணுயிரிகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்