தாவரவியல் :: தாவரச் செயல்கள்
41. ஊடுபரவழுத்தம் என்றால் என்ன?
ஒரு வழிச்செல் படலத்திற்கு எதிர்ப்பக்கங்களிலுள்ள கரைசல்களின் செறிவு வேறுபாடுகளால் உண்டாகும் சமநிலை.
42. நுனி (முனை) நோக்கியது என்பது எதைக் குறிக்கின்றது?
இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை அடியிலிருந்து நுனிநோக்கி அமைவதைக் குறிப்பது. காட்டாகப் பூக்களின் வளர்ச்சி நுனிநோக்கியது. தாவரத்தின் வழியாக நீர் செல்லுதல் நுனிநோக்கியே அமையும்.
43. தூண்டல் இயக்கங்கள் என்பவை யாவை?
இவை திசைச்சாரா அசைவுகள். தாவரங்களுக்கே உரியவை.
44. இவற்றின் வகைகள் யாவை?
1. ஒளிஇயக்கம்: தூண்டல் ஒளி. பூக்கள் மலர்தல்.
2. மேலியக்கம்: பூ மூடுதல்.
3. கீழியக்கம் : தாவரக் கீழ்ப்பகுதி அதிகம் வளர்தல்.
4. வெப்பஇயக்கம்: நிலைத்த ஒளிச்செறிவில் டுலிப் பூக்கள் வெப்பக்காற்றில் மலர்ந்து குளிர்க்காற்றில் மூடுதல்,
5. இரவியக்கம்: ஆக்சாலிஸ் இலைகள்.
6. தொடு இயக்கம்: வீனஸ் பறப்புக்கண்ணி.
45. ஒளித்துண்டல் இயக்கம் என்றால் என்ன?
திசையைப் பொறுத்து அமையாமல், மாறிய ஒளிச் செறிவுத் துண்டல்களால் சில தாவரங்கள் வெளிப் படுத்தும் துலங்கல். எ-டு. பசலைக்கீரை.
46. காற்றமைவு இயக்கம் என்றால் என்ன?
இது உயிர்வளிச் செறிவு வாட்டத்திற்குத் துலங்கலாக உள்ளது. எ-டு இயங்கக் கூடிய குச்சிவடிவ உயிர்கள் நேரிடை (+) அமைவியக்கமும் இயங்கக்கூடிய கட்டாயக் காற்றுப் பருகு குச்சிவடிவ உயிர்கள் எதிரிடை (-) அமைவு இயக்கமும் கொண்டவை.
47. வேதியமைவு இயக்கம் என்றால் என்ன?
வேதித் துரண்டலுக்கேற்றவாறு குறிப்பிட்ட திசையில் உயிரிநகர்தல், எ-டு. பெண்ணணு நோக்கித் தாவர ஆண் அணு செல்லுதல்.
48. ஒளியமைவு இயக்கம் என்றால் என்ன?
ஒளித்துண்டலால் நடைபெறும் இயக்கம்.
49. ஒளிவாழ்விகள் யாவை?
பசுந்தாவரங்கள்.
50. ஒளிநாட்டம் என்றால் என்ன?
இது ஒளியினால் ஏற்படும் வளைவியக்கம். ஒளிநோக்கித் தண்டு வளரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இயக்கம், என்ன, என்றால், யாவை