தாவரவியல் :: தாவரச் செயல்கள்
31. இவற்றின் பயன் யாது?
இவை தோட்டக்கலையிலும் வேளாண்மையிலும் அதிகம் பயன்படுபவை.
32. கிபரிலிகக்காடிகள் என்பவை யாவை?
இவை தாவரத்தை வளர்க்கும் வேதிப்பொருள்கள். கிபரில்லா புஜிகுரை என்னும் பூஞ்சையிலிருந்து கிடைப்பது.
33. கேலிகக்காடியின் பயன் யாது?
மைகள் செய்யப் பயன்படுவது.
34. பசுமை இல்லம் என்றால் என்ன?
பருவம் தவறிய தாவரங்களைப் போதிய தட்பவெப்பக் கட்டுப்பாட்டுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கும் கண்ணாடிக்கூடம்.
35. வளர்ப்பு ஊடகம் என்றால் என்ன?
வளர்ப்புக்கரைசல். ஊட்டங்கள் சேர்ந்த கலவை. நுண்ணுயிரிகள், பூஞ்சை முதலியவற்றை வளர்க்கப் பயன்படுவது.
36. நுண்புழைக் கவர்ச்சியின் சிறப்பு யாது?
புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாக ஒடுங்கிய திறப்பின் வழியாக உயரும் நிகழ்ச்சி. நிலத்தடி நீரைத் தாவரங்கள் உறிஞ்சிப் பயன்படுத்திக் கொள்ள இது உதவுகிறது.
37. நுண்புழைநீர் என்றால் என்ன? இதன் பயன்கள் யாவை?
நுண்புழைக்கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத் தடிநீர்.
38. இதன் பயன்கள் யாவை?
1. தாவரத்தண்டு வழியாக ஊட்டநீர் தாவரத்தின் மற்றப் பகுதிகளுக்குச் செல்லுதல்.
2. இந்நெறிமுறையில் தானே மை நிரப்பும் ஊறி, மை உறிஞ்சும் தாள், பூத்துணித்துண்டுகள் ஆகியவை வேலை செய்கின்றன.
39. ஊடுபரவுமானி என்றால் என்ன?
படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங் கருவி.
40. ஊடுபரவல் என்றால் என்ன?
படலம் மூலம் இருகரைசல்கள் பரவல். அடர்குறை கரைசல் ஒருவழிச்செல் படலம் வழியாக அடர்மிகு கரைசலுக்குச் செல்லுதல். எ-டு. வேர்கள் ஊட்டநீரை உறிஞ்சுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், வழியாக, யாவை, யாது