தாவரவியல் :: தாவரச் செயல்கள்
21. கடத்தல் என்றால் என்ன?
தாவர ஊட்டப்பொருள்கள் அதன் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லுதல். இதை நொதிச் செயல் ஊக்குவிக்கிறது.
22. விதை முளைத்தல் என்றால் என்ன?
தகுந்த சூழ்நிலைகளில் விதையிலுள்ள குழந்தைச்செடி முளைத்து வெளிவருதல்.
23. இதன் வகைகள் யாவை?
1. தரைமேல் விதை முளைத்தல் - அவரை.
2. தரைகீழ் விதை முளைத்தல் - நெல்.
24. விதையுறக்கம் என்றால் என்ன?
பாதுகாக்கப்பட்ட விதையின் முளைக்கரு நீருடன் தொடர்பு கொள்ளும் வரை செயலற்றிருக்கும் நிலை. இந்நிலை சூல் விதையாக மாறியதிலிருந்து. விதை ஊன்றப்படும் வரை இருக்கும்.
25. வளர்ச்சி என்றால் என்ன?
இயற்பியல் உடலியல் செயல்களினால் உயிரணு உடலின் எடையிலும் அளவிலும் ஏற்படும் பெருக்கம். மீள்மாறு நிலை இல்லாதது.
26. பொதுவாக வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகள் யாவை?
1. வைட்டமின்கள்.
2. ஆர்மோன்கள் - வளர்துண்டிகள்.
3. ஆக்சின்கள் - தாவரத்துண்டிகள்.
27. வளர்ச்சி எதிர்ப்பி என்றால் என்ன?
தாவரங்களில் வளர்ச்சியைத் தடுக்கும் பொருள்.
28. தூயவளர்ப்பு என்றால் என்ன?
இதில் ஒரு நுண்ணுயிரியின் ஒரு சிறப்பினம் மட்டும் இருக்கும்.
29. வளர்ப்பிகள் என்றால் என்ன?
தாவர வளர்துண்டிகள் - உயிரியல் வினையூக்கிகள்.
30. இவற்றின் ஆராய்ச்சி வரலாறு யாது?
ஒட்ஸ் நாற்றுகளில் இவை பற்றி முதன்முதலில் ஆராயப் பட்டது. எ-டு இண்டோல் 3, அசெட்டிகக்காடி, கிப்ரெலின்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, விதை, முளைத்தல்