தாவரவியல் :: தாவரச் செயல்கள்
11. இது எவ்வாறு நடைபெறுகிறது?
1. தம்மூட்ட வாழ்விகளான பசுந்தாவரங்கள் காற்றிலுள்ள கரி இரு ஆக்சைடைக் கொண்டு மாப்பொருள் தயாரிக்கின்றன. இவை வேற்றூட்ட வாழ்விகளான விலங்குகளுக்கு உணவு.
2. கரி இரு ஆக்சைடு மீண்டும் காற்றுவெளிக்குச் செல்கிறது. நீரில் கார்பனேட்டிலும் இரு கார்பனேட்டிலும் கரியமைந்து ஒளிச்சேர்க்கைக்கு ஊற்றாக அமைகிறது.
12. கிரப்ஸ் சுழற்சி என்றால் என்ன?
கிரப்ஸ் (1900-1981) என்பவர் பெயரால் அமைந்தது. சிக்கல் வாய்ந்த நொதிவினைச் சுழற்சி. இதை நாரத்தைக்காடிச் சுழற்சி என்றும் கூறலாம்.
13. கால்வின் சுழற்சி என்றால் என்ன?
பென்சன்-கால்வின் - பாஷம் சுழற்சி. ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட்செயல் வினைகள் இதில் அடங்கும். இறுதியாகக் கரி இரு ஆக்சைடு மாப்பொருளாகிறது.
14. பிளாக்மன் வினை என்றால் என்ன?
ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட்செயல். ஒளிச்செயலைத் தொடர்ந்து வருவது. நீர் அய்டிரஜனில் கரி இரு ஆக்சைடு ஒடுங்கிச் சர்க்கரையாகிறது.
15. பையூரெட் ஆய்வு என்றால் என்ன?
புரதங்களையும் அவற்றின் வழிப்பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. இதில் தோன்றும் ஊதாநிறம் புரதமிருப்பதைக் காட்டும்.
16. பிரெளனியன் இயக்கம் என்றால் என்ன?
ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டுவிட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம்.
17. இவ்வியக்கத்தை யார் எப்பொழுது எதில் ஆராய்ந்தார்?
ஆங்கில நாட்டுத் தாவரஇயலார் ராபர்ட் பிரெளன் 1872இல் இதனை மகரந்தத்தூளில் ஆராய்ந்தார்.
18. இதன் சிறப்பென்ன?
பாய்ம மூலக்கூறுத் துகள்களின் தொடரும் தாக்குதலால் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதி களைப் பொறுத்தவரை இது அடிப்படைச் சிறப்பு வாய்ந்தது.
19. நீராவிப் போக்கு என்றால் என்ன?
தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளல்.
20. நீராவிப்போக்கின் நன்மைகள் யாவை?
1.தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது.
2. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீர் மரஉச்சிக்குச் செல்ல உதவுகிறது.
3. அதிக அளவு நீரை உறிஞ்சித் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய நீரைப் பெறுகின்றன.
4. உயிரணுச் சாற்றைச் செறிவடையச் செய்து ஊடுபரவுதலுக்கு உதவுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், சுழற்சி, ஆக்சைடு