தாவரவியல் :: தாவரச் செயல்கள்
91. நடுநிலைப் பொழுதுத் தாவரம் என்றால் என்ன?
பூப்பதற்குக் குறிப்பிட்ட ஒளிக்காலத்தை விரும்பாத தாவரம்.
92. சுழலியக்கி என்றால் என்ன?
முழுத்தாவரத்தையும் சுழலச் செய்யும் எந்திரக் கருவியமைப்பு. ஒரு குறிப்பிட்ட திசையில் உண்டாகும் துண்டலின் விளைவை நீக்கப் பயன்படுவது. ஈர்ப்பின் செல்வாக்கு நீங்கிய நிலையில் தாவர உறுப்புகள் வளர்ச்சியை ஆராயப் பயன்படுவது.
93. வளர்ச்சிமானி என்றால் என்ன?
தாவரப் பகுதிகளின் நீள் வளர்ச்சியை அளக்கப் பயன்படுங் கருவி.
94. நுண்வெட்டி என்றால் என்ன?
நுண்ணாய்விற்காக இலை, திசு, தண்டு முதலிய பகுதிகளை மெல்லிய சீவல்களாக வெட்டுங் கருவி. உயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுவது.
95. வார்பர்க் விளைவு என்றால் என்ன?
ஒளிச்சேர்க்கையும் கரி இரு ஆக்சைடு தன்வயமாதலும் காற்றிலுள்ள உயிர்வளியினால் தடைப்படுகிறது. இதனை 1920இல் வார்பர்க் விளக்கினார். இந்நிகழ்ச்சி நடைபெறுவது பின்னர்க் கண்டுபிடிக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது