தாவரவியல் :: தாவரச் செயல்கள்
1. பச்சையம் என்றால் என்ன?
தாவர உறுப்புகளிலுள்ள பசும்பொருள். ஒளிச்சேர்க் கைக்கு இன்றியமையாதது. இதனால் தாவரம் தன்னூட்ட வாழ்வி ஆகும்.
2. பசுங்கணிகம் என்பதன் பொருள் என்ன?
பச்சையமுள்ள அணு.
3. பச்சையச்சோகை என்றால் என்ன?
இரும்பு ஊட்டம் குறைவதால் தாவரப்பசும்பகுதிகள் வெளுக்கும்.
4. பசுங்கணிகம் என்றால் என்ன?
தாவர உயிரணுக்களில் உள்ளவை. ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதவை.
5. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
தாவரங்கள் இலைத்துளைகளின் வாயிலாகப் பெறும் கரி இரு ஆக்சைடு, வேர்மூலம் மண்ணிலிருந்து பெறும் ஊட்டநீர் ஆகியவற்றைக் கொண்டு அவற்றின் பசும் இலைகளும் தண்டுகளும் கதிரவன் ஒளியில் பச்சையத்தின் உதவியில் மாப்பொருள் தயாரித்தல்.
6. ஒளிச்சேர்க்கைக்கு வேண்டிய நிபந்தனைகள் யாவை?
1. ஒளி. 2. நீர். 3. கரி இரு ஆக்சைடு.
7. ஒளிச்சேர்க்கைக் குச்சி வடிவ உயிரிகள் என்பவை யாவை?
இவை பச்சையத்தைப் பெற்றுள்ளன. இதற்குக் குச்சி வடிவ உயிரிப் பச்சையம் என்று பெயர்.இதனால் இவை ஒளிச்சேர்க்கை நடத்தவல்வை.
8. ஒளிச்சேர்க்கை நிறமிகள் யாவை?
பச்சையமும் பகங்கணிகங்களும்
9. ஹில்வினை என்றால் என்ன?
ஒளிச்சேர்க்கைத் தொடர்பாக 1937இல் இராபர்ட் ஹில் என்பார் முதன்முதலில் விளக்கிக் காட்டிய ஆய்வு. முதலில் நடைபெறுவது ஒளிச்செயல். இதைத் தொடர்வது இருட்செயல்.
10. கரிச்சுழற்சி என்றால் என்ன?
சூழ்நிலைக்கும் உயிரிகளுக்குமிடையே நடைபெறும் கரிச்சுற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவரச் செயல்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, ஒளிச்சேர்க்கை