தாவரவியல் :: நோபல் பரிசுகள்

81. உயிரணுக்களில் தனி அயனிவழிகளின் வேலையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
எர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும்1991இல் பெற்றனர்.
82. மீன் திரும்புப் புரதப்பாசுவர ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
எச். எண்டமண்ட பிஷல், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் பெற்றனர்.
83. பாலிமரேஸ் தொடர்வினை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
பி. கேரி முல்லிஸ் 1993இல் பெற்றார்.
84. பிளவு மரபணுக்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
டாக்டர் ஜே.ரிச்சர்ட்ஸ், ஷார்ப் ஆகிய இருவரும் 1993இல் பெற்றனர்.
85. உயிரணுக்களின் குறிபாடுகள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஜி. ஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1994இல் பெற்றனர்.
86. தொடக்கக் கருவளர்ச்சி, மரபணுக்கட்டுப்பாடு ஆகியவை பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
எட்வர்டு லூயி, வோல்கார்டு, வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995 இல் பெற்றனர்.
87. உயிரணுவழி அமையும் தடுப்புப் பாதுகாப்பின் சிறப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சி. பீட்டர் டோகர்ட்டி, சிங்கர் ஜெனல் ஆகிய இருவரும் 1996 இல் பெற்றனர்.
88. அடினோசைன் முப்பாஸ்பேட் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
டி. பால் பாயர், ஸ்கவ், வால்கா ஆகிய மூவரும் 1997இல் பெற்றனர்.
89. புரதங்களின் குறிகாட்டும் இயல்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
டாக்டர் குன்டர் புளோபல் 1999இல் பெற்றார்.
90. சைக்கிளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
டாக்டர் டிமோதி ஹண்ட், லிலேண்ட் ஹார்ட்வெல், டாக்டர் பால்நர்ஸ் ஆகிய மூவரும் 2001இல் பெற்றனர்.
91. வினையூக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
2001இல் கே. ஷார்ப்லஸ் பேரி, ஆர் நோயோரிக், நோலெஸ் ஆகிய மூவரும் 2001 இல் பெற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், நோபல், பரிசு, பெற்றனர், ஆகிய, பெற்றவர்கள், ஆராய்ச்சிக்காக, மூவரும், டாக்டர், இருவரும், கண்டறிந்ததற்காக