தாவரவியல் :: நோபல் பரிசுகள்
41. நாரத்தைக் காடிச் சுழற்சியைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
சர் ஹேன்ஸ் அடால்ஃப் கிரப்ஸ் 1953இல் பெற்றார்.
42. துணைநொதி Aஐக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
பிரிட்ஸ் ஆல்பர்ட் லிப்மன் 1953இல் பெற்றார்.
43. இளம்பிள்ளைவாத நச்சுயிர் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், வெல்லர், இராபின்ஸ் ஆகிய மூவரும் 1954இல் பெற்றனர்.
44. உடல்பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
டேனியல் போவட்1957இல் பெற்றார்.
45. மரபணுக்களின் குறிப்பிட்ட வேதிநிகழ்ச்சிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1958இல் ஜார்ஜ் வெல்ஸ் பீடில், டெல்பர்க், டேடம் ஆகிய மூவரும் பெற்றனர்.
46. இன்சுலின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
பிரடரிக் சேங்கர், ஜூல்பர்ட் ஆகிய இருவரும் 1958இல் பெற்றனர்.
47. செயற்கைத் தடுப்பாற்றலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர் பிராங் மாக்பர்லேன் பர்னே, மெடவார் ஆகிய இருவரும் 1960இல் பெற்றனர்.
48. கரி தன்வயமாதலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
மெல்வின் கால்வின் என்பார் 196இல் பெற்றார்.
49. காதுநத்தை எலும்புத்தூண்டுதல் பொறிநுட்பத்தை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜார்ஜ் வான் பெர்க்சி. 1961இல் பெற்றார்.
50. கோளவடிவப் புரத ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர் ஜான் கெளடரி கெண்ட்ரு, பெருட்ஸ் ஆகிய இருவரும் 1962இல் பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், யார், பரிசு, பெற்றனர், பெற்றார், ஆகிய, ஆராய்ச்சிக்காக, பெற்றவர்கள், பெற்றவர், இருவரும், ஆராய்ந்ததற்காக