தாவரவியல் :: நோபல் பரிசுகள்
31. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
கார்ல் பீட்டர் டேம், அடல்பெர்ட்டாய்சி ஆகிய இருவரும் 1943 இல் பெற்றனர்.
32. பெனிசிலின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?
அலெக்சாண்டர் பிளமிங், சர் எர்னஸ்ட் போரிஸ் செயின், கோமகன் ஹோவர்டு வால்டர் ஆகிய மூவரும் 1945இல் பெற்றனர்.
33. ஊட்ட வேதியியல், வேளாணியல் ஆகிய இரு துறைகளுக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
அர்டுரி இல்மாரி விர்டானன் 1945இல் பெற்றார்.
34. காரமங்களின் உயிரியல் சிறப்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர் இராபர்ட் இராபின்சன் 1947இல் பெற்றார்.
35. சடுதிமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜோசப் ஹெர்மன் முல்லர் 1946இல் பெற்றார்.
36. நொதிகளைப் படிகமாக்கலாம் என்னும் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1946இல் சமனர் ஜேம்ஸ் பேட்செல்லர், நார்த்ட்ராப், ஸ்டேன்லி ஆகிய மூவரும் 1946 இல் நோபல் பரிசு பெற்றனர்.
37. நடுமூளை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வால்டர் ருடால்ப் ஹெஸ் 1949இல் பெற்றார்.
38. அட்ரினல் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
பிலிப் ஷொவால்டர் ஹென்ச், ஈ.சி. கெண்டால், டி. ரிச்டெயின் ஆகிய மூவரும் 1950 இல் பெற்றனர்.
39. மஞ்சள் காய்ச்சலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
மாக்ஸ் தெய்லர் 1951இல் பெற்றார்.
40. ஸ்டெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
செல்மன் அப்பிரகாம் நாக்ஸ்மன் 1952இல் பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், யார், பரிசு, பெற்றவர், பெற்றார், ஆகிய, பெற்றனர், ஆராய்ச்சிக்காக, பெற்றவர்கள், மூவரும், கண்டுபிடிப்பிற்காக