தாவரவியல் :: நோபல் பரிசுகள்

11. காதிலுள்ள முன்றில் என்னும் பகுதியின் நோய்த்தன்மை, செயற்பாடு ஆகிய இரண்டையும் ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1914இல் இராபர்ட் பாரனி என்பார் பெற்றார்.
12. தாவரப் பச்சைய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ரிச்சர்டு வில்ஸ்டேட்டர் 1915இல் பெற்றார்.
13. தடுப்பாற்றல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜூல்ஸ் பார்டெட் 1919இல் பெற்றார்.
14. தசையில் பால்காடி வளர்சிதைமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஆட்டோ பிரிட்ஸ் மெயர்ஹாஃபி, ஹில் ஆகிய இருவரும் 1922இல் பெற்றனர்.
15. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1923இல் சர் பிரடரிக் கிராண்ட்பேண்டிங், ஜே.ஜே.ஆர். மாக்லியாடு ஆகிய இருவரும் பெற்றனர்.
16. ஸ்பைராப்டிரா கார்சினோமா என்னும் நச்சுயிரைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜோகான்ஸ் ஆண்ட்ரியாஸ் பைபிஜர் 1926இல் நோபல் பரிசு பெற்றார்.
17. பித்தநீர்க்காடிகளின் இயைபை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1927இல் ஆட்டோ ஹெயின்ரிச் வீலேண்டு 1927இல் நோபல் பரிசு பெற்றார்.
18. டைபஸ் காய்ச்சல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சார்லஸ் ஜூல்ஸ் ஹென்றி நிக்கோலி 1928இல் பெற்றார்.
19. நொதிகள், சர்க்கரை நொதித்தல் ஆகியவற்றிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1929இல் சர் ஹார்டன் ஆர்தர், யூலர் செல்பின் ஆகிய இருவரும் பெற்றனர்.
20. நரம்பு நோய் நீக்கம் வைட்டமின்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
கிறிஸ்டியன் எய்ஜக்மன், ஹாப்கின்ஸ் ஆகிய இருவரும் 1929இல் பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றவர், பெற்றார், ஆகிய, இருவரும், பெற்றவர்கள், பெற்றனர், ஆராய்ச்சிக்காக