தாவரவியல் :: நோபல் பரிசுகள்

1. தொண்டை அடைப்பானுக்குரிய எதிர்நச்சைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வான் பெரிங் 1901இல் முதன்முதலாக மருத்துவத்திற்குப் பெற்றார்.
2. அனோபிலஸ் கொசு மலேரியாவைப் பரப்புகிறது என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர் ரொனால்டு ராஸ் 1902இல் கண்டறிந்தார்.
3. சர்க்கரைத் தொகுப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹெர்மன் எமில் பிஷர் 1902இல் பெற்றார்.
4. செரித்தலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
பாவ்லவ் 1904இல் பெற்றார்.
5. காச் என்புருக்கி நுண்ணுயிரி, விப்ரியோ கமா என்னும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
இராபர்ட் கோச் என்பார் 1905இல் நோபல் பரிசு பெற்றார்.
6. நரம்பு மண்டல அமைப்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சந்தியா கோரமோன் கஜால், சிகோல்சி ஆகிய இருவரும் 1906இல் பெற்றார்.
7. கட்டிலா நொதித்தல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
எட்வர்டு புக்னல் 1907இல் பெற்றார்.
8. பிளாஸ்மோடியம் மலேரியாவை உண்டாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சார்லஸ் லேவரன் 1907இல் பெற்றார்.
9. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
பால் எச்ரிலிச், ஐ.ஐ. மக்னிகோ ஆகிய இருவரும் 1908இல் பெற்றனர்.
10. கண்ணறை வேதியியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆல்பிரக்ட் கோசல் 1910இல் நோபல் பரிசு பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பரிசு, நோபல், யார், பெற்றவர், பெற்றார், ஆராய்ச்சிக்காக, கண்டுபிடித்ததற்காக