முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » தாவரவியல் » இருவிதையிலைத் தாவரக் குடும்பம் - மால்வேசி
தாவரவியல் :: இருவிதையிலைத் தாவரக் குடும்பம் - மால்வேசி
1. இதன் வளரியல்பு யாது?
செடிகள், குற்றுமரங்கள், சளிபோன்ற நீர்மம் இருக்கும்.
2. இதன் இலைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
ஒன்றுவிட்டு ஒன்று அமைந்துள்ளன. இலையடிச் செதில்கள் உண்டு. தனி இலை அல்லது உள்ளங்கை வடிவ இலை.
3. இதன் பூக்கள் எவ்வாறு உள்ளன?
தனியாக இலைக்கோணத்தில் இருக்கும் அல்லது முனையிலும் இருக்கும். இருபால் பூக்கள், ஒழுங்கானவை, மேற்குல்பைப் பூக்கள்.
4. புல்லிவட்டம் எவ்வாறு உள்ளது?
ஐந்து புல்லிகள் இணைந்து தொடுஇதழமைவில்.
5. அல்லிவட்டம் எவ்வாறு உள்ளது?
5 அல்லிகள் இணையாதவை அடியில் சேர்ந்திருக்கும் திருகிய இதழமைவு.
6. மகரந்தம் எவ்வாறு உள்ளது?
பல மகரந்தத் தாள்கள் உள்ளன. எல்லாம் சேர்ந்து ஒரு குழலை உண்டாக்கும். இக்குழலில் மகரந்தப் பைகள் காம்புகளால் இணைந்திருக்கும்.
7. சூலகம் எவ்வாறு உள்ளது?
மேற்குல்பை. இணைந்திருக்கும் சூல் இலைகள் மூன்றிலிருந்து பல இருக்கும். சூல் அவ்வாறே ஒன்றி லிருந்து பல இருக்கும் அச்சுச் சூலமைவு. சூல்தண்டு தனித்திருக்கும். மகரந்தக்குழல் வழியாகச் செல்லும். அல்லது பூவரசில் உள்ளது போன்று கரளைவடிவத்தில் இருக்கும்.
8. கனி எப்படிப்பட்டது?
பொதிகை அல்லது பிளவுறுகனி.
9. இக்குடும்பத்திற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
1. துத்தி பொதுவாகக் காணப்படும் ஒரு தாவரம். பொருளாதாரச் சிறப்பும் (இழை) மருத்துவ் சிறப்பும் உள்ளது.
2. வெண்டை - தோட்டச்செடி இதன் காய் சமையலுக் கேற்றது.
3. சணல் செடி- இதன் இழை சணல் செய்யப் பயன்படுவது.
4. பருத்திச்செடி-இது பொருளாதாரச் சிறப்புள்ள பஞ்சு தருவது.
5. பூவரசு- இதன் கட்டை பல மரவேலைகளுக்குப் பயன்படுவது.
6. இலவு இலவம்பஞ்சு தருவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருவிதையிலைத் தாவரக் குடும்பம் - மால்வேசி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உள்ளது, இதன், எவ்வாறு, இருக்கும், அல்லது, பூக்கள்