தாவரவியல் :: மேதை மகேஸ்வரி
1. மகேஸ்வரி என்பது ஆண் பெயரா? பெண் பெயரா?
ஆண் பெயர்
2. இவர்தம் முழுப்பெயர் என்ன?
பஞ்சணன் மகேஸ்வரி
3. இவர் எங்கு எப்பொழுது பிறந்தார்?
ஜெய்பூரில் 1904 இல் பிறந்தார்.
4. வின் பீல்டு டட்ஜன் என்பவர் யார்?
அலகாபாத் பல்கலைகழகத் தாவரவியல் பேராசிரியர். தொண்டாற்ற வந்த அமெரிக்கர். சிறந்த தாவர நூல் பேராசிரியர்.
5. இப்பேராசிரியர் நிறுவிய கழகம் எது?
இந்திய தாவரவியல் கழகம். இதன் நிறுவனத் தலைவர் இவரே.
6. இப்பேராசிரியர் ஒரு சமயம் மகேஸ்வரியிடம் கூறியது யாது?
"போதிய கல்வி பெற்றபின் தந்தையின் நோக்கத்தை மகன் நிறைவேற்ற வேண்டும் என்பது இந்து நம்பிக்கை. என் மகன் இறந்து விட்டான். என்னுடைய தொண்டை நிறைவேற்ற ஒரு மாணவனை (மகேஸ்வரியை) விட்டுச் செல்கிறேன்"
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் (குறள் 68)
7. அவர் எப்பொழுது தம் அறிவியல் பெரு முனைவர் பட்டத்தைப் பெற்றார்?
1931இல் பெற்றார்.
8. அலகாபாத்தை விட்டுச் செல்லுமுன் அவர் தம் பேராசிரியரிடம் கூறியவை யாவை?
"ஐயா! தாங்கள் எனக்கு நிறையச் செய்துள்ளிர். அதற்குக் கைமாறாக நான் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டா?
9. இதற்குப் பேராசிரியன் மறுமொழி யாது?
" நான் உனக்குச் செய்ததை உன் மாணவர்களுக்குச் செய்." மகேஸ்வரி இதைத் தம் வாழ்நாள் செய்தியாக எடுத்துக் கொண்டார்.
10. அவர்தம் சிறப்புத் துறை என்ன?
தாவரக் கருவியல்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேதை மகேஸ்வரி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ", மகேஸ்வரி