தாவரவியல் :: இலை
31. அச்சு விலகியது என்பது எதைக் குறிக்கிறது?
இது இலைக் கீழ்ப் பரப்பைக் குறிக்கும். இலை முதலிய பக்க உறுப்புகளில் இச்சொல் கீழ்ப்புறம் (வெண்ட்ரல்) என்று பொருள்படும்.
32. இளம் அரும்பு என்றால் என்ன?
இளம் தாவர இலைகளையும் பூக்களையும் கொண்ட மொட்டு.
33. ஊசியிலை வடிவம் என்றால் என்ன?
இலை நீண்டும் குறுகியும் உருண்டையாகவும் இருத்தல். எ-டு. பைன்மர இலை.
34. இலைக்கோணம் என்றால் என்ன?
தண்டில் தண்டுக்கும் இலைக்கும் இடையிலுள்ள கோணம். இதில் கோணக் குருத்துள்ளது.
35. இலைச்சுருளமைவு என்றால் என்ன?
இளமையாக இருக்கும் பொழுது, இதில் முழுக் கூட்டிலையும் கடிகாரச் சுருள் போன்று வளைந்திருக்கும். எ-டு. பெரணி.
36. விதையிலை என்றால் என்ன?
விதைத் தாவர முளைக் கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரண்டும் நெல்லில் ஒரு விதையிலையும் இருக்கும்.
37. வகைப்பாட்டில் இதன் சிறப்பு யாது?
இதைக் கொண்டு தாவரங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1. இரு விதையிலைத் தாவரங்கள் - மா, பலா.
2. ஒரு விதையிலைத் தாவரங்கள் - தென்னை, பனை.
38. தழைப்பிலைகள் என்பவை யாவை?
இலைத் தொகுதியான பொது இலைகள்.
39. வேற்றிட அரும்புகள் என்றால் என்ன?
முளை இலைத் தாவரங்களில் இவை விளிம்பில் தோன்றும். எ-டு. பிரையோபைலம் (கட்டிப்போட்டால் குட்டி போடு இலை). ஒவ்வொரு அரும்பும் ஒரு புதிய தாவரம் ஆகும். தோன்றும் இடம் வேறுபடுவதால் இப் பெயர்.
40. காப்பணு என்றால் என்ன?
இலைத் துளையின் பக்கத்திலுள்ள அவரை விதை வடிவமுள்ள புறத்தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவை இலைத்துளை மூடித் திறப்பதைக் கட்டுப்படுத்துபவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலை - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இலைத், தாவரங்கள்