தாவரவியல் :: குடும்பங்களை அடையாளங்கண்டறிதல்
1. இருவிதை இலைத் தாவரங்கள் என்று எப்படி அறிவது?
1. விதையில் இரு வித்திலைகள் இருக்கும்.
2. குழாய்த் தொகுதி திறந்தநிலை உள்ளது.
2. ஒரு விதையிலைத் தாவரங்கள் என்று எப்படி அறியலாம்?
1. விதையில் ஒரு வித்திலை இருக்கும்.
2. ஒலைகள் மட்டும் உண்டு.
3. மால்வேசிக் குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. மலர்கள் ஆரச்சமச்சீருள்ளவை.
2. அல்லிவட்டம் திருகு இதழ் அமைவு உள்ளது.
3. ஒரு முடி மகரந்தத்தாள்கள்
4. மகரந்தப்பைகள் அவரைவிதை வடிவம்.
5. அச்சுச் சூலமைவு.
4. பேப்பேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறிவது?
1. பூக்கள் இருபக்கச் சமச்சீருள்ளவை.
2. அல்லிவட்டம் கீழிறங்கி அடுக்கு இதழமைவில்
3. மகரந்தத்தாள்கள் ஒரு முடி அல்லது இருமுடியில்
4. விளிம்புச் சூலமைவு.
5. சொலானேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறிவது?
1. இலைகள் இலையடிச்சிதல்கள் அற்றவை.
2. மலர்கள் மேற்குல் பை உள்ளவை.
3. வளமான மகரந்தத்தாள்கள்.
4. சூற்பை ஒவ்வொரு அறையிலும் பல சூல்கள் இருக்கும்.
5. அச்சுச் சூலமைவு.
6. லேமியேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. எதிரிலை அமைவு அல்லது வட்ட அமைவு.
2. மகரந்தத்தாள்கள் பொதுவாக 4.
3. சூற்பை இரு அறைகள் கொண்டது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள்.
4. அடிச்சூலமைவு.
7. அந்தரேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. இலைகள் இலையடிச் செதில்கள் அற்றவை.
2. சிரமஞ்சரி அல்லது தலைப்பூக்கொத்து.
3. புல்லிவட்டம் மயிர்க்குஞ்சமாக இருக்கும்.
4. மகரந்தப்பைகள் இணைந்தவை.
8. அரிக்கேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. உயரமான பல பருவச் சிறுசெடிகள் அல்லது கட்டைத் தன்மையுள்ள மரங்கள்.
2. சுழல்அமைப்பில் இருவரிசையில் இலைகள் அமைந்திருக்கும். தனிஇலைகள்.
3. கீழ்மட்டச் சூல்பை.
9. மூசேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. உயரமான பல பருவச் சிறு செடிகள் அல்லது கட்டைத் தன்மையுள்ள மரங்கள்.
2. சுழலமைப்பில் இரு வரிசைகளில் கிளைகள் அமைந் திருக்கும். தனி இலைகள்.
3. கீழ்மட்டச் சூல் பை.
10. ஒரு தாவரத்தை வகைப்படுத்திக் காட்டுக.
உலகம் - தாவர உலகம்
பிரிவு - விதைத் தாவரங்கள்
வகுப்பு - இருவிதையிலைத் தாவரம்,
குடும்பம் - மால்வேசி.
பேரினம் - அய்பிஸ்கஸ்.
சிறப்பினம் - ரோசாசைனன்சிஸ்.
முழுப்பெயர் - அய்பிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் - செம்பருத்தி.
11. பெந்தம் - ஹீக்கர் வகைப்பாட்டில் அடங்கியுள்ள குடும்பங்கள், பேரினங்கள் சிறப்பினங்கள் யாவை?
குடும்பங்கள் 200 பேரினங்கள் 73569. சிறப்பினங்கள் 97,145.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடும்பங்களை அடையாளங்கண்டறிதல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எவ்வாறு, குடும்பத்தை, அல்லது, இனங்கண்டறியலாம், இலைகள், இருக்கும், மகரந்தத்தாள்கள், அமைவு, தாவரங்கள், சூலமைவு