தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்
61. ஆண்நிலைச்சிதல் என்றால் என்ன?
ஊடோகோனியேல் தாவரங்களில் உண்டாக்கப்படும் சிறப்பு வகைச்சிதல். கருவுறுதலில் மறைமுகமாகப் பங்குபெறுவது.
62. துணைச்சிதல் என்றால் என்ன?
இது பாலிலாச் சிதலாகும்.
63. வளர்சிதல் என்றால் என்ன?
பாதகச் சூழ்நிலைகளில் சில செம்பாதியங்கள் மீட்புச் சிதலை உண்டாக்குபவை.
64. தற்சிதல் என்றால் என்ன?
பாலற்ற சிதல். சில ஒற்றைக் கண்ணறைப் பாசிகளில் உண்டாவது. இது தன் பெற்றோரை ஒத்திருப்பது. தான் விடுபடும்பொழுது, இது பெரிதாகிப் புதிய தாவரக் கண்ணறையை உண்டாக்குவது.
65. முட்டைச்சிதல் (அபூஸ்போர்) என்றால் என்ன?
கருவுற்ற சிதலகத்திலிருந்து (ஊகோனியம்) பால் இனப்பெருக்கமில்லாமல் சிதல் உண்டாதல். இது ஒய்வு நிலைக் கருவணுவாகும்.
66. துயில்சிதல் என்றால் என்ன?
ஒய்வுறும் உயிரணு அல்லது சிதல். பாசிகளில் காணப்படுவது.
67. கலவியிலிச் சிதல் என்றால் என்ன?
கன்னிப் பிறப்பு முறையில் தோன்றி ஓய்வு கொள்ளும் கருச்சிதல். கலவியில்லாமல் உண்டாவதால் கலவிச் சிதலாகும்.
68. பெருஞ்சிதல் என்றால் என்ன?
பெரணிகளிலும் விதைத்தாவரங்களிலும் காணப்படுவது.
69. பெருஞ்சிதல் இலை என்றால் என்ன?
மாறிய இலை. பெருஞ்சிதலகத்தைத் தாங்குவது. எ-டு. செலாஜினல்லா.
70. செதில் போலி என்றால் என்ன?
செதில் போன்ற புறவளர்ச்சி. வடிவத்திலும் அளவிலும் மாறுபடுவது. சில விதைத் தாவரங்களிலும் புற்களிலும் பெரணிகளிலும் காணப்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சிதல், காணப்படுவது