தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்
51. கோணவாட்டு வளர்ச்சி என்றால் என்ன?
முனை முடிவுறு வளர்ச்சி. இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியால், மாசிகளில் முதலச்சு முடிவுறுவதால், பின் வளர்ச்சி ஏற்படும். இந்நிலையில் முதலச்சு நேராக இருக்கும்.
52. தலைமுறை மாற்றம் என்றால் என்ன?
பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறிமாறி வரும் இரு தலைமுறைகளுக்குத் தலைமுறை மாற்றம் என்று பெயர், பெரணி.
53. இதிலுள்ள இரு தலைமுறைகள் யாவை?
1. சிதல்பயிர்த் தலைமுறை.
2. பாலணுப் பயிர்த் தலைமுறை.
54. இவ்விரண்டில் செடியாக வளருவது எது?
சிதல்பயிர்த் தலைமுறை.
55. அடிலகம் என்றால் என்ன?
பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு சிதல்களை உண்டாக்குவது.
56. மூடுபடை என்றால் என்ன?
பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள்.
57. மூடுபடலம் என்றால் என்ன?
ஆக்குதிசுவடுக்கு புற்களின் வேர்முனை ஆக்குதிசுவை மூடி இருக்கும். வேர்மூடியை உண்டாக்கும்.
58. சிதல் என்றால் என்ன?
விதையின் முன்னோடி. பெரணி முதலிய கீழினத் தாவரங்களில் சிதல் பையில் உள்ளது. இனப்பெருக்கம் செய்வது.
59. சிதல் தாவரம் என்பது யாது?
பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் இது சிதல் தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இதுவே உண்மையான பெரணி.
60. நிலைச்சிதல் என்றால் என்ன?
பாசியணுக்களில் உண்டாகும். தடித்த சுவரும் இயக்க மின்மையும் உள்ளது. இதில் எண்ணெய்ச் சேமிப்பும் உணவுச் சேமிப்பும் உண்டு. இது பருவம் விட்டுப்பருவம் வாழ உதவுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சிதல், தலைமுறை, பெரணி, வளர்ச்சி