தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்

41. ஆணியல் அணுக்கள் என்றால் என்ன?
ஆண் இனப்பெருக்க உறுப்பில் உண்டாகும் நுண்ணிய அணுக்கள்.
42. பெண்ணியம் (ஆர்க்கிகோனியம்) என்றால் என்ன?
குடுவை வடிவப் பெண் இனப்பெருக்க உறுப்பு. பெரணிகளிலும் பாசிகளிலும் காணப்படுவது.
43. அல்சிதல் தோற்றம் என்றால் என்ன?
பூக்காத் தாவர வாழ்க்கை வரலாற்றில் சிதல் தோன்றாமல், சிதல்தாவரத்திலிருந்து உறுப்பு நிலையில் பாலணுத் தாவரம் தோன்றுதல்.
44. மாசித் தாவரங்கள் என்றால் என்ன?
பூவாத் தாவரங்கள். இவற்றிற்கு இலை, தண்டு என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறைமாற்றம் உண்டு. எ-டு மாசிகள், கல்லீரல் தட்டுகள்.
45. காற்றுப்பருகா உயிரி என்றால் என்ன?
தான் வாழக் காற்று தேவை இல்லாத உயிரி. அதாவது உயிர்வளி தேவை இல்லை. எ-டு சில குச்சி வடிவ உயிரிகள்.
46. காற்றுப் பருகா மூச்சு என்றால் என்ன?
ஈஸ்ட், குச்சி வடிவ உயிரிகள், தசை முதலியவற்றில் நடைபெறும் மூச்சு. கரிமப்பொருள் முழுவதும் ஆக்சிஜன் ஏற்றம் பெறுவதில்லை. ஆகவே, உண்டாகும் ஆற்றலும் குறைவு.
47. காற்றுப்பருகுயிரி என்றால் என்ன?
தான் வாழக் காற்றை உட்கொள்ளும் உயிரி, தாவரம் விலங்கு.
48. காற்றுப் பருகுமூச்சு என்றால் என்ன?
இதில் தடையிலா உயிர்வளி கரிமப் பொருள்களை ஏற்றஞ் செய்வதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாகும். அதிக அளவு ஆற்றல் கிடைக்கும்.
49. முனை வளர்உயிரி என்றால் என்ன?
தன் முனையில் வளர்புள்ளியுள்ள விதையிலாத் தாவரம். எ-டு. பெரணி, பாசி.
50. வெளியேற்றல் என்றால் என்ன?
சிதல் (ஸ்போர்) தன் காம்பிலிருந்து வலிய வெளித் தள்ளப்படுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், உண்டாகும், உயிரி, தாவரம், உறுப்பு