தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்

31. நுண்பூஞ்சிழை என்றால் என்ன?
பூஞ்சையின் கிளைத்த இழையுடல்.
32. பூப்பாசி என்றால் என்ன?
பூஞ்சையும் பாசியும் சேர்ந்த கூட்டுத் தாவரங்கள். பூக்கா வகையைச் சார்ந்தது. எ-டு. சாந்தோரியா.
33. பையகப் பெண்ணியம் என்றால் என்ன?
பூஞ்சையிலுள்ள பெண் பாலுறுப்பு. கருவுற்றபின் பூஞ்சை வகைக் கிளைகளை உண்டாக்குவது.
34. பையகம் என்றால் என்ன?
பை போன்ற உறுப்பு. இது விரிந்த கண்ணறை. குன்றல் பிரிவில் எட்டுச் சிதல்களை உண்டாக்குவது.
35. வித்தியம் என்றால் என்ன?
பூஞ்சையில் காணப்படும் வித்துறுப்பு. சிதல்கள் முதிர்ச்சியடையும் வரை மூடியிருக்கும்.
36. காளானின் பயன்கள் யாவை?
1. உணவு.
2. ஒயின் தயாரிக்கப் பயன்படுவது.
37. ஈஸ்ட்டு என்பது யாது?
சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஒரனுப் பூஞ்சை. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுவது. அரும்புதல் மூலம் இனப்பெருக்கம்.
38. போலிப்பூஞ்சிழை என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் அரும்புதல்நடைபெறுவதால், உயிரணுக்கள் தளர்ச்சியாகத் தொடர்களில் இணைந்திருக்கும். எ-டு. ஈஸ்டு.
39. முதல் தண்டகம் என்றால் என்ன?
சிதலினால் உண்டாக்கப்படும் பெரணியின் கருப்பயிர். இதயவடிவத்தில் பசுமையாக இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. இதில் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இருக்கும். கருப்பயிர்த் தலைமுறையை உண்டாக்குவது.
40. ஆணியம் (ஆந்திரிடியம்) என்றால் என்ன?
பாசிகள், மாசிகள், பெரணிகள் ஆகியவற்றில் காணப்படும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. இது ஆண் அணுக் களை உண்டாக்குவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, உண்டாக்குவது