தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்
21. நீளிழை என்றால் என்ன?
கசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம்பெயர் இயக்கத்திற்கு உதவுவது. எ-டு. குச்சிவடிவ உயிர்கள்.
22. இரு நீளிழை கொண்ட உயிரி யாது?
கண்ணறையின் ஒவ்வொரு முனையிலும் இரு நீண்ட இழைகளைக் கொண்ட குச்சி வடிவ உயிர்கள்.
23. பூஞ்சணம் என்பது யாது?
பூஞ்சை இனத்தைச் சார்ந்தது. உணவுப்பொருள்களில் படிந்து வாழ்வது. எ-டு. ரொட்டிப் பூஞ்சணம்.
24. பூஞ்சைகள் என்பவை யாவை?
சாறுண்ணிகளாகவும் ஒட்டண்ணிகளாகவும் வாழும் பூக்காத் தாவரங்கள். பச்சையமில்லாததால் கூட்டு வாழ்விகள்.
25. பூஞ்சைக் கொல்லி என்றால் என்ன?
பூஞ்சைகளைக் கொல்லும் வேதிப்பொருள்.
26. பூஞ்சை இயல் என்றால் என்ன?
பூஞ்சைகளை ஆராயுந்துறை.
27. பூவிலங்கு என்றால் என்ன?
தாவர இயல்புகளையும் விலங்கு இயல்புகளையும் பெற்றுள்ள உயிரி. ஆனால், விலங்காகவே கருதப்படுவது. எ டு. சேற்றுப்பூஞ்சை.
28. பூஞ்சைய வேரி என்றால் என்ன?
பூஞ்சையில் நுண்ணிழைகளுக்கும் உயர்தாவர வேர்களுக்கும் இடையே உள்ள இயைபு.
29. இவ்வேரிகளின் வகைகள் யாவை?
1. புறஊட்டவேர்கள் - மரங்கள்.
2. அகஊட்ட வேர்கள் - ஆர்க்கிட்டுகள்.
30. படலகம் என்றால் என்ன?
பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்