தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்
11. எஸ்வி 40 என்னும் நச்சியத்தின் முழு மரபணு அமைப்பு எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?
1978இல் கண்டுபிடிக்கப்பட்டது.
12. கோல்வடிவ உயிரி (பேசிலஸ்) என்றால் என்ன?
கோல்வடிவ நுண்ணுயிரி. காற்றுப் பருகும் உயிரணு உண்டு. உட்சிதல்களால் இனப்பெருக்கம் செய்வது. இயக்கத்திற்குப் பெரும்பாலானவற்றிற்கு நீளிழைகள் உண்டு. இது சாறுண்ணி, எ-டு. பேசிலஸ் ஆந்தராசிஸ்.
13. தொண்டை அடைப்பான் என்பது யாது?
இது ஒரு நோய். பேசிலஸ் ஆத்தராசிஸ் என்னும் நுண்ணுயிரினால் கால்நடையிலும் மனிதனிடத்தும் உண்டாவது.
14. குச்சி வடிவ உயிரிகளால் (பாக்டீரியா) ஏற்படும் தீமைகள் யாவை?
இசிவு, என்புருக்கி நோய், தொண்டைஅடைப்பான், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, கொள்ளைநோய், மேகநோய் முதலிய நோய்களை உண்டாக்குபவை.
15. குச்சிவடிவ உயிரிகளின் நன்மைகள் யாவை?
தோசைமாவு புளித்தல், இலைகள் நார்கள் ஊறிப் பதமாதல், குப்பைகளங்கள் மட்குதல் முதலியவை நன்மைகள்.
16. குச்சிவடிவ உயிரி இயல் என்ன?
குச்சிவடிவ நுண்ணுயிரிகளை ஆராயும் உயிரியல் துறை.
17. குச்சிவடிவ உயிரிகள் (பாக்டீரியா) என்றால் என்ன?
இவற்றின் வடிவம் குச்சி. இவை கோல், சுருள், கோளம் ஆகிய மூன்று வடிவங்களில் உள்ளவை. நுண்ணோக்கியில் பார்க்க ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள்.
18. இவை ஏன் ஒட்டுண்ணிகளாகவும் சாறுண்ணிகளாகவும் உள்ளன?
பச்சையம் இல்லாததால் தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்ள இயலாது. ஆகவே, ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன.
19. குச்சியியல் உண்ணிகள் என்றால் என்ன?
இவை நச்சுயிரிகள். தம் வால் மூலம் குச்சி வடிவ உயிருடன் இணைந்து தொற்றுபவை. இவை குச்சிவடிவ உயிரிகளுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும்.
20. குச்சியியல் வேரிணை வாழ்வு என்றால் என்ன?
வேருக்கும் குச்சிவடிவ உயிரிகளுக்கும் இடையே அமைந்த பிணைப்பு வாழ்வு. வேர் முண்டுகளில் இவை தங்கித் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தைப் பெறுகின்றன. மாறாக, அவை நைட்ரேட் உப்புகளை வேர் முண்டுகளில் உண்டாக்குகின்றன. இவ்வாறு இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று உதவி வாழ்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - குச்சிவடிவ, என்ன, என்றால், குச்சி, பேசிலஸ்