தாவரவியல் :: பூக்காத் தாவரங்கள்

1. பூக்காத் தாவரங்கள் என்பவை யாவை?
தாவரப் பெரும் பிரிவில் ஒன்று. இதில் மேலும் மூன்று பிரிவுகள் உண்டு.
1. தண்டகத் தாவரங்கள் - கிளமிடோமோனாஸ்
2. பாசிகள் - பாசி.
3. பெரணிகள் - பெரணி.
2. கிளமிடோமோனாஸ் என்றால் என்ன?
தாவரத்தில் முதலில் தோன்றிய ஒரு கண்ணறை உயிர். கிண்ண வடிவமுள்ள பசுங்கணிகம் இருப்பதால் தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும். இயக்கத்திற்கு முனையில் இரு குற்றிழைகள் இருக்கும்.
3. பால்மெல்லாநிலை என்றால் என்ன?
கிளமிடோமோனாசின் சேயனுக்கள் மீண்டும் மீண்டும் பிரிந்து வடிவமற்ற ஒரு வாழ்தொகுதியை உண்டாக்கும். இவ்வாறு கண்ணறைகள் திரள்வதே பால்மெல்ல நிலை எனப்படும். பால்மெல்லா என்பது ஒரு பாசிச் சிறப் பினம். இதனை இத்திரட்சி ஒத்திருப்பதால் இப்பெயர் வரலாயிற்று.
4. பாசிகள் என்றால் என்ன?
பச்சையமுள்ள கீழினத் தாவரங்கள். பச்சையமுள்ளதால் ஒளிச்சேர்க்கை நடத்துபவை. உடல் ஒற்றை உயிரணு வாலானது.இந்த அணுவே கழிவகற்றல், இனப்பெருக்கம், மூச்சுவிடுதல் முதலிய எல்லா வேலைகளையும் செய்வது, கிளமிடோமானாஸ் கீழினத் தாவரங்களில் தோன்றிய முதல் உயிர்.
5. பாசியியல் என்றால் என்ன?
பாசிகளை ஆராயும் துறை.
6. நல்லுயிரிகள் (eukaryotes) என்றால் என்ன?
மரபணுப்பொருள் உட்கருப்படலத்தால் மூடப்பட்டுள்ள உயிரி. எல்லா உயர் தாவரங்களும் விலங்குகளும் உட்கருப் படல உயிரிகளே.
7. முன்நல்லுயிரிகளின் (prokaryotes) சிறப்பியல்புகள் யாவை?
படலஞ்சூழா உயிரிகள். நீலப்பசும்பாசி, குச்சிவடிவ உயிரிகள் முதலியவை. இவற்றின் உறுப்புகளில் உட்கருப் படலம் இல்லை. இதுவே இதற்குப் பெயர்க்காரணம்.
8. நச்சியம் (வைரஸ்) என்றால் என்ன?
அலி உயிரி. ஒம்பு உயிரியில் இருக்கும் வரையில் உயிருள்ளது. படிகமாக்கலாம். மீநுண்ணோக்கி மூலமே காணலாம். தீமைகளையே உண்டாக்குவது.
9. இதைக் கண்டறிந்தவர் யார்?
1892இல் உருசியத் தாவர இயலார் இவனோஸ்சி கண்டறிந்தார்.
10. நச்சியம் உண்டாக்கும் நோய்கள் யாவை?
அக்கி, சளிக்காய்ச்சல், நீர்க்கொள்ளை, நாய்க்கடி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூக்காத் தாவரங்கள் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, தாவரங்கள்