தாவரவியல் :: கனி
21. தேங்காய் என்பது என்ன? அதன் முக்கிய வேலை என்ன?
தேங்காய் என்பது முளை சூழ்தசையாகும். இது தென்னம்பிள்ளையின் குருத்தும் வேரும் வளர ஊட்டம் அளிப்பது. இதன் புறவுறை அகணி, நடுவுறை நார். உள்ளுறை கொட்டாங்கச்சி.
22. கொட்டை என்பது என்ன?
ஒரு வகை உண்மைக்கனி, ஒரு விதை மட்டும் உள்ளது. எ-டு மாங்கொட்டை, முந்திரிக்கொட்டை
23. செவ்வறைக்கனி (அக்கீன்) என்றால் என்ன?
ஒரு சூல் இலைச் சூல்பையிலிருந்து உண்டாகும் ஒற்றை விதைக்கனி, நெல்.
24. கருவுறாக்கனி என்றால் என்ன?
கருவுறாமல் உண்டாகுங்கனி, எ-டு வாழை, அன்னாசி.
25. கருவுறா இனப்பெருக்கம் என்றால் என்ன?
கருவுறா முட்டை ஒர் உயிராக வளர்தல்.
26. கனிகள் எளிதாகப் பரவ உள்ள அமைப்புகள் யாவை?
1. நாயுருவி - முட்கள்
2. எருக்கு - குஞ்சம்
3. விதைகள் இலேசாக இருத்தல்.
27. கனிகள் பரவக் காரணமென்ன?
தங்கள் இனங்கள் பல இடங்களில் நிலை கொள்ளவும், போதிய உணவு, ஒளி, காற்று முதலியவற்றைப் பெற்று வாழ்க்கைப் போராட்டத்தைத் தவிர்க்கவும் இவை பரவுகின்றன.
28. கனிஉறை என்றால் என்ன?
கனியின் சுவர் இது. இது மூவகை.
1. புறவுறை
2. நடுவுறை
3. உள்ளுறை
29. மாம்பழத்தில் உண்ணும் பகுதி எது?
நடுவுறையான சதைப்பகுதி.
30. பூசுனை வகைக்கனி என்றால் என்ன?
கீழ்ச்சூல்பையிலிருந்து உண்டாவது. பறங்கி, கக்கரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், என்பது