தாவரவியல் :: கனி

1. கனி என்றால் என்ன?
கருவுற்றுப் பழுத்த சூல்பையே கணி.
2. காய் என்றால் என்ன?
கருவுற்று முதிர்ந்த சூல்பையே காய்.
3. கருவுறாக்கனி என்றால் என்ன?
கருவுறாமல் முதிர்ச்சி அடையுமானால் அக்கனி கருவுறாக்கனி, எ-டு. வாழை, கொய்யா.
4. கனியின் வகைகள் யாவை?
1. தனிக்கனி - மா.
2. திரள்கனி - சீதாப்பழம்.
3. கூட்டுக்கனி - பலாப்பழம்.
5. தனிக்கனி என்றால் என்ன?
ஒரு சூல்பையிலிருந்து உண்டாகும் கனி, மா.
6. தனிக்கனியின் வகைகள் யாவை?
1. சதைக்கனி - ஆப்பிள்.
2. உலர்கனி - தென்னை நெற்று.
7. சதைக்கனியின் வகைகள் யாவை?
1. சாற்றுக் கனி - திராட்சை,
2. ஒட்டுக்கனி - மா.
3. பூத்திரள் கனி - ஆப்பிள்.
4. கொப்பூழ்க்கனி - பறங்கி.
5. நாரத்தை வகைக்கனி - எலுமிச்சை.
8. உலர்கனி வகைகள் யாவை?
1. வெடிகனி,
2. வெடியாக் கணி.
9. வெடிகனியின் வகைகள் யாவை?
1. பருப்புக்கனி - உளுந்து.
2. ஒருபுற வெடிகனி - எருக்கு.
3. குறுக்குமுறிகனி - கருவேல்.
4. அறைவெடி பொதிகை - வெண்டை
5. தடுப்பு வெடி பொதிகை - ஆடுதீண்டாப்பாளை.
6. கவர்பிரிபொதிகை - ஊமத்தை.
7. துளைக்கனி - கஞ்சா.
8. மூடிபிரிகனி - போர்ட்டுலாகா.
9. பொய்ச்சவர்கனி - கடுகு,
10. பல்பிளவுறுகனி - கொத்துமல்லி.
10. வெடியாக்கனியின் வகைகள் யாவை?
1. விதையுறைத்தனிக்கனி - கிளிமேட்டிஸ்,
2. அறைக்கனி - கீரைக்கணி.
3. மணிக்கனி - நெல்.
4. சிறகுக்கனி - வேம்பாடம்.
5. கொட்டை - முந்திரி.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, வகைகள், என்ன, என்றால்