தாவரவியல் :: பூ
51. சூலுறை என்றால் என்ன?
சூல் திசுவைச் சுற்றியுள்ள உறை. இது சூல் வெளியுறை, உள்ளுறை என இரு வகை.
52. கருவுறுதல் என்றால் என்ன?
ஆண் அணு (விந்தணு) பெண் அணுவோடு (சினை அணுவோடு) சேரும் நிகழ்ச்சி. கலவி இனப்பெருக்கம் சார்ந்தது.
53. தாவரங்களில் கருவுறுதலுக்கு முந்திய நிலை யாது?
மகரந்தச் சேர்க்கை.
54. மேற்குல்பைப்பூ என்றால் என்ன?
புல்லிகள், அல்லிகள், மகரந்தத்தாள் ஆகியவற்றிற்கு மேலுள்ள சூல்பை. இதற்கு மேலுள்ள பூ மேற் சூல்பைப்பூ ஆகும். எ-டு. வெங்காயம்.
2. பூக்கொத்து
55. பூக்கொத்து என்றால் என்ன?
தனியாகவோ கொத்தாகவோ தண்டில் பூ அமைந் திருக்கும் முறை.
56. இதன் வகைகள் யாவை?
1. நெடுங்கொத்து - முடிவில்லாப் பூக்கொத்து. எ-டு. கடுகு, அவரை.
2. குறுங்கொத்து - முடிவுள்ள கொத்து. எ-டு. மல்லிகை.
3. மீங்கொத்து - தனியமைப்புள்ளது. எ-டு. அத்தி.
57. தலைப்பூக்கொத்து என்றால் என்ன?
சூரியகாந்திப் பூவின் கொத்து.
58. பொதிகை என்றால் என்ன?
1. ஒரு பிளவுறு கனி - வெண்டை
2. குச்சி வடிவ உயிரியில் கண்ணறைப் படலத்தைச் சுற்றியுள்ள படலம்.
3. மாசியின் கருப்பயிர்த் தலைமுறையில் காணப்படும் பகுதி.
4. ஓர் உறுப்பு அல்லது பகுதியில் சூழ்ந்துள்ள பாதுகாப்புறை.
59. கதிர்க்கொத்து என்றால் என்ன?
கதிர்ப்பூக்கொத்து. ஒருபால் பூக்கள் குஞ்சம் போல் இருக்கும். பூவடிச் செதில்களாகப் பூக்கள் குறைந்திருக்கும். எ-டு. மஞ்சள் மலர்ச்செடி (வில்லோ)
60. ஊசல் பூக்கொத்து என்றால் என்ன?
பல காம்பற்ற பூக்கள் இதிலிருக்கும். இவை வழக்கமாக ஒருபால் பூக்கள், நாயுருவி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூ - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பூக்கள், பூக்கொத்து