தாவரவியல் :: பூ
41. வாழ்காலம் என்றால் என்ன?
மொட்டில் தோன்றுவதிலிருந்து விதையாகும் வரையுள்ள பூவின் காலம்.
42. பூவமைவு என்றால் என்ன?
தண்டில் பூக்கள் அமைந்திருக்கும் முறை.
43. சூல்பை என்றால் என்ன?
பூவின் பருத்த அடிப்பகுதி. இதில் சூல்கள் அமைந் திருத்தல்.
44. சூல்பை நிலையை ஒட்டி பூவின் வகைகள் யாவை?
1. மேற்குல்பைப்பூ - பூவரசு.
2. கீழ்ச்சூல்பைப்பூ - சூரியகாந்தி.
3. அரைக்கீழ்ச்சூல்பைப்பூ - சீசல்பினியா.
45. சூல் என்பது யாது?
பூக்குந் தாவரங்களின் சூல்பையில் காணப்படும் சிறு உறுப்பு. கருவுற்ற பின் விதையாக மாறுவது.
46. சூல்வளர்கரைசல் என்றால் என்ன?
தகுந்த வளர் ஊடகத்தில் நறுக்கிய சூல்களை வளர்த்துத் தாவரப் பெருக்கத்தை ஆராய்தல்.
47. சூலின் வடிவங்கள் யாவை?
1. நேர்ச்சூல் - வெற்றிலை.
2. வளைகுல் - கடுகு,
3. தலைகீழ்ச்சூல் - அவரை.
4. அரைத்தலைகீழ்ச்சூல் - லெம்னா.
48. சூலொட்டு என்றால் என்ன?
சூல்கள் உள்ள ஒட்டுப் பகுதி.
49. சூலமைவு என்றால் என்ன?
சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர்.
50. சூலமைவின் வகைகள் யாவை?
1. ஓரச்சூலமைவு - அவரை.
2. அச்சுச் சூலமைவு - பூவரசு
3. கவர்ச்சூலமைவு - பாசிபுளோரா.
4. தனிச்சூலமைவு - டயான்தஸ்.
5 அடிச்சூலமைவு - நெட்டிலிங்கம்.
6. மேலெழுசூலமைவு - நீரல்லி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூ - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சூலமைவு, யாவை, பூவின், சூல்கள்