தாவரவியல் :: பூ
31. மகரந்தத்தாள் என்றால் என்ன?
தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு. அவரை விதை வடிவ மகரந்தப்பையும் அதைத் தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும்.
32. மகரந்தச் செருகலின் வகைகள் யாவை?
1. அல்லி ஒட்டியவை.
2. அல்லி ஒட்டாதவை.
33. மகரந்தத்தாள் எத்தனை வகைப்படும்?
1. ஈரிணை மகரந்தத்தாள் - தும்பை.
2. அல்நீள மகரந்தத்தாள் - கடுகு,
34. மகரந்தத்தாள் ஒன்றிப்பின் வகைகள் யாவை?
1. ஒற்றைமுடி மகரந்தம் - பூவரசு.
2. இரட்டைமுடி மகரந்தம் - கிளைட்டோரியோ.
3. பலமுடி மகரந்தம் - பாம்பாக்ஸ்.
4. குழாய் அமை மகரந்தம் - சூரியகாந்திப்பூ
35. பகுதி வேற்றுமை என்றால் என்ன?
பூவட்டங்களில் பகுதிகள் சமமற்றிருத்தல்.
36. வேற்றிலை நிலை என்றால் என்ன?
தண்டின் வேறுபட்ட பக்கங்களில் வேறுபட்ட இலைகள் தோன்றுதல். எ-டு. லைக்கோபோடிய வகை.
37. பூவடிச்செதில் என்றால் என்ன?
இது மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூவிற்குக் கீழ் வளர்வது.
38. பூக்காம்புச் செதில் என்றால் என்ன?
பூக்காம்பிலுள்ள சிறிய இலை.
39. பூநாடல் என்றால் என்ன?
இவ்வியல்பு பூச்சிகளுக்குண்டு. இதனால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியுண்டு.
40. பூத்தாங்கி என்றால் என்ன?
புல்லி வட்டத்திற்கும் அல்லிவட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூ - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மகரந்தத்தாள், மகரந்தம்