தாவரவியல் :: பூ
11. அவரையின் அல்லிகளைக் கூறு?
இதன் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்லி. இது சிற கல்லிகள் இரண்டையும் படஅல்லிகள் இரண்டையும் தன்னுள் கொண்டிருக்கும் ஆக அல்லிகள் 5.
12. மகரந்தவட்டம் என்றால் என்ன?
மகரந்தத்துள், மகரந்தப்பை முதலியவற்றைக் கொண்ட பூவின் மூன்றாம் வட்டம். பயனுறு உறுப்பான ஆண் உறுப்பு.
13. சூல்வட்டம் என்றால் என்ன?
பூவின் நான்காம் வட்டம். இது பெண்பகுதி. சூல்பை, சூல்தண்டு, சூல்முடி ஆகியவற்றைக் கொண்டது. முதிர்ந்த சூல் விதை. முதிர்ந்த சூல்பை காய்.
14. பூவின் பால்பரவல் வகைகள் யாவை?
1. இருபால் பூ - பூவரசு.
2. ஒருபால் பூ - தென்னை.
3. ஒரில்லப் பூ - ஆமணக்கு.
4. ஈரில்லப்பூ - தென்னை.
5. கலவைப்பூ - மா.
6. நிறைவுள்ள பூ - செம்பருத்தி.
7. நிறைவற்ற பூ - கிளிமேட்டிஸ் பூ
15. பூத்தளம் என்றால் என்ன?
பூக்காம்பின் விரிந்த பகுதி. இதில் பூப்பகுதிகள் பொருந்தி உள்ளன.
16. பூத்தளமாற்றுருக்கள் யாவை?
1. உருளை வடிவ வடிவம் - மைக்கீலியா.
2. கூம்பு வடிவம் - அனோனா.
3. குழாய் வடிவம் - தாமரை.
4. கிண்ண வடிவம் - காட்டுரோஜா.
5. வட்டுவடிவம் - ஆரஞ்சு
17. பூப்படம் என்றால் என்ன?
ஒரு பூவின் அமைப்பை எளிதாக அறியப் பயன்படும் படம். வகைப்பாட்டியியலில் சிறப்பிடம் பெறுவது.
18. பூ வாய்பாடு என்றால் என்ன?
ஒரு பூவின் பல பகுதிகளையும் தெளிவாகக் காட்டும் வாய்பாடு. எ-டு.
K(5) C5A (9)+1 G1
K(5) புல்லிகள் 5. இணைந்தவை.
C5 அல்லிகள் 5. இணையாதவை.
(A9)+1 மகரந்தத்தாளாக 9 இணைந்தும் 1 தனித்தும் உள்ளவை.
G1 ஓரறைச் சூல்பை.
இங்குக் குறிக்கப்பட்டிருப்பது அவரைப்பூ வாய்பாடு.
19. பூக்குந்தாவர ஊழி என்றால் என்ன?
முன் கேம்பிரியன் ஊழி முடிந்தபின் உள்ள காலம். அறிந்தறியக்கூடிய தொல்படிவுகளைப் பாறைகள் கொண்ட காலம்.
20. மகரந்தப்பை என்றால் என்ன?
மகரந்தத்தாளுக்கு மேலுள்ள பகுதி. மகரந்தத்துளை உண்டாக்குவது. இத்துளில் ஆண் அணுக்கள் இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூ - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பூவின், வடிவம், வாய்பாடு, சூல்பை