தாவரவியல் :: உயிர்மலர்ச்சியும் மரபியலும்
61. ரிபோசோம் என்றால் என்ன?
எல்லா உயிரணுக்களிலும் கானப்படுகின்ற நுண்ணுறுப்பு. புரதத்தொகுப்பு நடைபெறுமிடம். இதிலுள்ள ஆர்என்ஏ ரிபோசோம் ஆர்என்ஏ.
62. ஆர்என்ஏ என்றால் என்ன?
ரிபோ உட்கருகாடி கண்ணறைக் கணியத்தில் முதன்மையாக உள்ளது.
63. இதன் வகைகள் யாவை?
தூது ஆர்என்ஏ, ரிபோசோம் ஆர்என்ஏ, மாற்றும் ஆர்என்ஏ.
64. உயிரியாக்கம் என்றால் என்ன?
மூலக்கூறுகளின் பகர்ப்பாக உயிரிகள் தோன்றுகின்றன. உயிரிலித் தோற்றத்தில் ஒர் எல்லைக்கல். டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகிய இரண்டு விந்தை வேதிப்பொருள்களும் தாமே பெருகக் கூடியவை.
65. நியுக்கிளியோசைடு என்றால் என்ன?
ஒர் அரிய மூலக்கூறு. பியூரின் அல்லது பிரிமிடின் மூலங்கள் கொண்டது. இம்மூலம் ரிபோஸ் அல்லது டீஆக்சிரிபோஸ் சர்க்கரையோடு சேர்ந்திருக்கும். எ-டு. அடினோசைன், சைட்டோசின், கானோசைன், தைமிடின், பியூரிடின்.
66. சடுதிமாற்றம் என்றால் என்ன?
மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன் வேறுபடுதலுக்குச் சடுதிமாற்றம் என்று பெயர்.
67. சடுதிமாற்றக் கொள்கையை யார் எப்பொழுது முன் மொழிந்தார்?
டச்சு தாவரவியலார் டிவைரைஸ் ஹயூகோ. 1901இல் முன்மொழிந்தார்.
68. இம்மாற்றத்தின் இயல்பு யாது?
இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது. ஆகவே, இதற்குக் கால்வழிப்பண்புண்டு. திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாகின்றன.
69. இணைமாற்றுகள் (அலீல்ஸ்) என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல். மெண்டல் விதிப்படி மரபுஉரிமை பெற்ற ஓரினை மாற்றுப் பண்புகளில் ஒன்று.
70. இணைமாற்றுகள் எவ்வாறு அமைகின்றன?
1. குன்றல்பிரிவில் ஒரே கண்ணறையில் இரட்டிக்கும் ஒத்த நிறப்புரிகளை பொறுத்தவரை, அவை ஒரே இருப்பிடத் தில் இருப்பவை.
2. ஒரே தொகுதி வளர்ச்சி முறைகளில் அவை வேறுபட்ட விளைவுகளை உண்டாக்கும்.
3. ஒன்று மற்றொன்றாகச் சட்டென்று மாற்றமடையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபியலும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆர்என்ஏ, என்ன, என்றால், ரிபோசோம்