தாவரவியல் :: உயிர்மலர்ச்சியும் மரபியலும்
51. அல்மயம் என்றால் என்ன?
ஒத்த எண்களில் நிறப்புரிகள் இல்லாத நிலை. அவற்றின் முழுஎண் ஒற்றைப்படை தொகுதியின் மடங்காக அமையாது. குன்றல் பிரிவில் நிறப்புரிகள் பிரியாததால் இந்நிலை ஏற்படுகிறது. எ-டு ஊமத்தை வகை.
52. அல்சிதல்மை என்றால் என்ன?
குன்றல் பிரிவு மாற்றமுறுவதில், வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் சிதல்கள் உண்டாதல். ஒவ்வொரு சிதல் தாயணுவிலும் நான்கிற்குப் பதில் இரண்டு சிதல்கள் தோன்றும். எ-டு. சிங்கப்பல் இலைத் தாவரம்.
53. தன்பன்மயம் என்றால் என்ன?
ஒரு வகைப் பன்மயம். இதில் ஒரு தனிவகை உயிரியிலிருந்து நிறப்புரித் தொகுதிகள் பெருக்கமடைதல். இழைப்பிரிவு அல்லது குன்றல் பிரிவில் ஏற்படும் தவறினால் தனிப் பன்மங்கள் உண்டாகின்றன. இதனால் ஒருமப் பாலணுக்களைவிட இருமப் பாலணுக்களே.
54. தன்னிருமம் (ஆட்டோடிப்ளாய்டு) என்றால் என்ன?
ஒற்றைப்படை நிறப்புரிகளைக் காட்டிலும் இரட்டைப் படை நிறப்புரிகளைக் கொண்ட பாலணு. இத்தகைய பாலணுக்கள் தவறான குன்றல் பிரிவினாலும் அல்லது நான்மத் திசுக்களிலிருந்தும் உண்டாக வழியுண்டு.
55. டிஎன்ஏ என்பது யாது?
இதன் விரிவு டிஆக்சிரிபோ நியூக்ளிகக்காடி என்பதாகும். நிறப்புரிகளில் முதன்மையாகக் காணப்படும் உட்கருகாடி
56. இதன் அமைப்பை எந்த மாதிரி நன்கு விளக்குகிறது?
வாட்சன் - கிரிக் மாதிரி.
57. டிஎன்ஏ தொடராக்கம் என்றால் என்ன?
இதன்மூலம் மரபணுக்களிலுள்ள செய்தி என்ன என்பதை அறிய இயலும். இதைப் புனைந்தவர் டாக்டர் மாக்சம் கில்பர்ட் (அமெரிக்கா), டாக்டர் சேங்கர் (இங்கிலாந்து).
58. வாட்சன் கிரிக் மாதிரியை விளக்குக.
டிஎன்ஏவின் அமைப்பு மாதிரி. இது இரட்டைத் திருகுச் சுருள் வடிவத்தில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட மாதிரி. அமெரிக்க உயிரிய வேதிஇயலார் ஜேம்ஸ்வாட்சனும் (1928-) பிரிட்டிஷ் உயிரியல் வேதியியலார் பிரான்சிஸ்கிரிக்கும் (1916-) 1953இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உறுதிசெய்த மாதிரி. இரு சுருள்களும் பாஸ்பேட் - சர்க்கரைத் தொடர்புகளைக் குறிப்பவை. இச்சுருள்களைச் சேர்ப்பவை பியூரைன் பைரிமிடின் இணைகள் ஆகும்.
59. ரிபோஸ் என்பது யாது?
இது ஒருவகைச் சர்க்கரை. ஆர்என்ஏவில் உள்ளது.
60. டீஆக்சிரிபோஸ் என்பது யாது?
இதுவும் ஒருவகைச் சர்க்கரை, டிஎன்ஏவில் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபியலும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மாதிரி, என்றால், குன்றல், உள்ளது, என்பது, யாது