தாவரவியல் :: உயிர்மலர்ச்சியும் மரபியலும்

21. கண்ணறை மரபணுவியல் என்றால் என்ன?
மரபுவழித்திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்புபடுத்துவதை ஆராயுந்துறை.
22. மெண்டல் கொள்கை கவனிப்பாரற்று எத்தனை ஆண்டுகள் கிடந்தது?
1865லிருந்து 1900 வரை கவனிப்பாரற்றுக் கிடந்தது.
23. தம் பட்டாணிச் செடி ஆராய்ச்சியை மெண்டல் எத்தனை ஆண்டுகள் செய்தார்?
8 ஆண்டுகள் செய்தார் (1857-1864)
24. மெண்டல் கொள்கை என்பது யாது?
கால்வழி பற்றி ஜோகன் கிரிகார் மெண்டல் (1822-1884) முன்மொழிந்திட்ட விதிகள் கொண்டது. அவை பிரிதல் விதியும் ஒதுக்கல் விதியும் ஆகும்.
25. மெண்டல் விதிகளைக் கூறுக.
1. பிரிதல் விதி எப்பண்பும் இரு காரணிகளாகவே உள்ளது. இக்காரணிகள் இரண்டும் உடல் கண்ணறைகளில் உள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே ஏதாவது ஒரு பாலணுவுக்குச் செல்வது.
2. ஒதுக்கல் விதி. இக்காரணிகளின் பரவல் வரம்பிலா முறையில் உள்ளது. காரணி இணைகள் பலவற்றைக் கருதும்பொழுது, ஒவ்வொரு இணையும் தனித்துப் பிரிவது அல்லது ஒதுங்குவது. மெண்டலின் பண்புகள் தற்காலத்தில் மரபணுக்கள் என்று பெயர் பெறுபவை.
26. உட்கரு என்றால் என்ன?
உயிரணுவில் முன் கணியத்திலுள்ள வட்டப்பொருள். உயிரணுவின் செயல்களைக் கட்டுப்படுத்துவது.
27. இதிலுள்ள முக்கியப் பகுதிகள் யாவை?
நுண்கரு, நிறப்புரிகள், மரபணுக்கள், டிஎன்ஏ, ஆர்என்ஏ.
28. உட்கரு காடிகள் என்பவை யாவை?
எல்லா உயிரணுக்களிலும் உள்ளவை. கரிம அமிலங்கள்.
29. இவற்றின் இருவகைகள் யாவை?
1. டிஆக்சி ரிபோஸ் உட்கரு காடி DNA.
2. ரிபோஸ் உட்கரு காடி RNA.
30. டிஎன்ஏவின் வேலைகள் யாவை?
1. புரதத்தொகுப்பு.
2. மரபுவழிப் பண்புகளைக் கொண்டு செல்லுதல். இது தலைமைக் கொத்தனார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபியலும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மெண்டல், உட்கரு, யாவை, ஆண்டுகள்