தாவரவியல் :: உயிர்மலர்ச்சியும் மரபியலும்
11. ஊக்கணுவாக்கம் என்றால் என்ன?
சார்லஸ் தார்வின் முன்மொழிந்த கொள்கை, ஊக்குவிக்கும் அணுக்கள் எல்லா உடல் உறுப்புகளிலிருந்தும் உடல் நீர்மங்களில் கலந்து, இனப்பெருக்க அணுக்களுக்குச் செல்கின்றன. இவை பாலணுக்களை ஊக்குவிக்க, அவை மீண்டும் அடுத்த தலைமுறைக்குரிய பண்புகளை ஊக்குவிக்கின்றன.
12. ஒருபோக்கு உயிர்மலர்ச்சி என்றால் என்ன?
ஒரே திசையில் நடைபெறும் வலுவான இயற்கைத் தேர்வினால் நெருங்கிய உறவுடைய உயிர்களுக்கிடையே ஒத்த இயல்புகள் உருவாதல். எ-டு. நீர் காக்கைக்கால், ஆற்றுக்காக்கைக்கால் ஆகிய இரு தாவரத்திலும் பிரிந்ததும் நீரில் முழ்கியதுமான இலைகள் உண்டாதல்.
13. புதுத்தார்வின் கொள்கை என்றால் என்ன?
இயற்கைத் தேர்வு வழியமைந்த உயிர்மலர்ச்சி குறித்த தார்வின் கொள்கை, மெண்டல் ஆராய்ச்சியின் விளை வாக எழுந்த உண்மைகளால் திருத்தியமைக்கப்பட்ட கொள்கை.
14. புது லெமார்க்கியம் என்றால் என்ன?
உயிர்மலர்ச்சி பற்றி மாற்றங்கள் பெற்ற லெமார்க்கு கொள்கை. இயற்கைத் தேர்வுக் கருத்துகளையும் சேர்ப்பது.
15. குவி உயிர்மலர்ச்சி என்றால் என்ன?
ஒத்த சூழ்நிலைகளில் வாழ்வதால், உறவிலா உயிர்களுக்கிடையே ஒத்த உறுப்புகள் உண்டாதல். எ-டு. பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சிறகுகள்.
16. உயிர்த்தோற்றம் என்றால் என்ன?
இது ஒரு திண்ணிய அறிவியல் கொள்கை. உயிர்ப் பொருள்களிலிருந்தே உயிரிகள் உண்டாக இயலும் என்பது இதில் வற்புறுத்தப்படுகிறது.
17. மரபணுவியல் என்றால் என்ன?
உயிரின் மரபுவழி, வளர்ச்சி, வேறுபாடு, மலர்ச்சி ஆகியவை பற்றி ஆராயுந்துறை.
18. மரபணுவியலின் தந்தை யார்?
ஜான் கிரிகார் மெண்டல்.
19. உயிரித்தொகை மரபியல் என்றால் என்ன?
ஒரே சிறப்பினத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியில் ஏற்படும் மரபுரிமை மாறுபாட்டின் பரவலை ஆராயுந் துறை. இதில் உயிரியலார் ஆல்டேன் வல்லுநர்.
20. மரபுவழி என்றால் என்ன?
பெற்றோரிடமிருந்து பெறும் மரபுக் கொடையின் தொகை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபியலும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கொள்கை, உயிர்மலர்ச்சி, ஒத்த, இயற்கைத்