தாவரவியல் :: உயிர்மலர்ச்சியும் மரபியலும்
1. உயிர்மலர்ச்சியை அல்லது பரிணாமத்தை நன்கு விளக்கிய இரு அறிவியல் அறிஞர்கள் யார்?
தார்வின், மெண்டல்.
2. உயிர்மலர்ச்சி என்றால் என்ன?
இவ்வுலகில் எளிய வகை உயிரிகள் எவ்வாறு பல வழிகளில் பல காரணிகளால் படிப்படியாக மாறி அரிய வகை உயிர்களைத் தோற்றுவித்தன என்பதை விளக்கும் கொள்கை.
3. உயிர்மலர்ச்சி நடைபெறுவதை நிலைநாட்ட உதவும் சான்றுகள் யாவை?
1. நிலவியல் சான்றுகள்
2. உருவியல் சான்றுகள்
3. கருவியல் சான்றுகள்.
4. உடலியல் சான்றுகள்.
4. இயற்கைத்தேர்வு என்றால் என்ன?
வாழ்க்கைப் போராட்டம் என்று தார்வின் கூறிய முறை. இதற்கேற்பத் தம் சூழ்நிலைக்குக் குறைந்த தகைவுள்ள உயிரிகள் அழியும். நிறைந்த தகைவுள்ளவை வாழும். தார்வின் கொள்கைப்படி வேறுபட்ட மக்கள் தொகையில் தன் செயலாண்மையை நிகழ்த்தி உயிர் மலர்ச்சியை உருவாக்குகிறது.
5. தார்வின் கொள்கை என்பது யாது?
உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. தார்வின் 1858இல் முன்மொழிந்தது. ஐன்ஸ்டீன் கொள்கை போன்று காலத்தால் அழியாதது. இயற்கைத்தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொள்கையின் கூறு. இதன்படி வலுவுள்ளவை வாழ்தல்; வலிவற்றவை வீழ்தல்.
6. இயற்கைத் தேர்வுமூலம் உயிர்மலர்ச்சி நடைபெறுகிறது என்பதை யார் எப்பொழுது அறிவித்தனர்?
1858இல் தார்வினும் ஆல்பிரட் வாலசும் அறிவித்தனர். லின்னேயிஸ் கழகத்திற்கு இதைத் தெரிவித்தனர்.
7. சிறப்பினங்களின் தோற்றம் என்பதைத் தார்வின் எப்பொழுது வெளியிட்டார்?
1859இல் வெளியிட்டார்.
8. மனிதன் தோற்றம் என்னும் நூலைத் தார்வின் எப்பொழுது வெளியிட்டார்?
1871இல் வெளியிட்டார்.
9. வாலேஸ் விளைவு என்றால் என்ன?
இயற்கை இயலார் வாலேஸ் முன்மொழிந்த கருத்து ஒரு சிறப்பினத்திற்குள் இனப்பெருக்கத் தடைகள் வளர்ந்து, பின் அவை தேர்வினால் மேம்பாடு அடைதல் என்பது இதன் கருத்து.
10. வாலேஸ்கோடு என்றால் என்ன?
இந்தோனேசியாவில் பாலிதீவுகளுக்கும் லாம்போக் தீவுகளுக்கும் இடையிலுள்ள கற்பனை எல்லை. ஆஸ்திரேலியத் திணை விலங்குகளையும் கீழ்த்திசைத் திணை விலங்குகளையும் பிரிப்பது. தார்வின் தம் உயிர்மலர்ச்சிக் கொள்கையை உருவாக்கியதில் வாலேஸ் (1823-1913) என்பவர் வரைந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபியலும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தார்வின், சான்றுகள், வெளியிட்டார், கொள்கை, என்ன, என்றால், வாலேஸ், உயிர்மலர்ச்சி, என்பது, எப்பொழுது