தாவரவியல் :: சூழ்நிலை இயல்
81. மண் மாசடைவதை எவ்வாறு தடுக்கலாம்?
புவிப்பொருள்களைக் கொண்டு இதைத் தடுக்கலாம். இது பகங்காரையும் கிளர்வுறு வீட்டுக்கரியும் சேர்ந்தது.
82. நீர் மாசுபடுவதை எவ்வாறு தடுக்கலாம்?
பாசிகளை வளர்த்துத் தடுக்கலாம். நீர்மாசடைதல் உலகிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் ஆகும்.
83. தொற்றிகள் என்றால் என்ன?
கட்டுபடுத்தப்பட வேண்டிய அளவுக்குள் தாவரங்களும் விலங்குகளும். எ-டு. களைகள், பூச்சிகள்.
84. மேல்தொற்றி என்றால் என்ன?
தன் உணவைத் தானே உருவாக்கிக் கொண்டு இருப்பிடத் திற்காக மட்டும் பிற தாவரங்களில் வாழும் தாவரம். எ-டு மரத்தாழை.
85. சாறுண்ணி என்றால் என்ன?
பச்சையம் இல்லாததால் தனக்கு வேண்டிய மாப்பொரு ளைப் பெற மட்டும் பொருள்களில் வாழ்கின்ற பூஞ் சணம், நாய்க்குடை முதலியவை.
86. ஒட்டுண்ணிகள் என்றால் என்ன?
தான் தங்கவும் உணவைப் பெறவும் பிற தாவரங்களில் வாழ்பவை ஒட்டுண்ணிகள் ஆகும். எ-டு. கஸ்கூட்டா, லொரான்தஸ்.
87. ஒட்டுண்ணிகளின் வகைகள் யாவை?
1. தற்செயல் ஒட்டுண்ணிகள் - சாண்டல்லம் ஆல்பம். லேண்டானவில் வாழ்வது.
2. அரைகுறை ஒட்டுண்ணிகள் - லொரான்தாஸ். இது மாமரத்திலும் ஆலமரத்திலும் காணப்படுவது.
3. முழு ஒட்டுண்ணி - கஸ்கூட்டா, கிளியோடெண்ரானில் வாழ்வது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஒட்டுண்ணிகள், என்ன, என்றால், தடுக்கலாம்