தாவரவியல் :: சூழ்நிலை இயல்
41. வறண்டநில வாழ்விகள் யாவை?
1. இயல்நிலை வறண்டநில வாழ்விகள் - சப்பாத்தி.
2. உடலியல் வறண்ட நிலவாழ்விகள் - கடல்புன்னை.
3. உப்புநிலவாழ்விகள் - கண்டல்.
42. வறண்டநில வாழ்விகள் யாவை?
வறண்ட சூழ்நிலையில் வாழும் தாவரங்கள். நீர்ப்பற்றாக் குறை, அதிகவெப்பநிலை, ஊட்டப் பொருள் குறைவு, அதிக ஆழம் முதலியவை வறண்ட நிலைகள். இலைகள் நீராவிப்போக்கைக் குறைக்க உருமாற்றம் பெறும். அவை இலைத்தொழில் தண்டாகவோ இலைத்தண்டாகவோ மாறும். வேர்கள் நீண்டிருக்கும். எ-டு சப்பாத்தி, கத்தாழை, அரளி, சுரபுன்னை.
43. நடுநிலைவாழ்விகள் என்றால் என்ன?
வளநிலத் தாவரங்கள் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. வளர்சூழ்நிலைகளில் வாழ் பவை. எ-டு. பூவரசு, ஆல்.
44. உப்பிட வாழ்வி என்றால் என்ன?
உப்புநீரில் வாழ்கின்ற தாவரம். அதாவது சதுப்புநிலத் தாவரம். எ-டு. அவிசீனியா.
45. உப்பிட வாழ்விகள் எங்குக் காணப்படும்?
பொதுவாகக் கடலுக்கு அடுத்துள்ள உப்பங்கழியில் காணப்படும்.
46. பாலைவனம் என்றால் என்ன?
பெரிய வட்டாரச் சமுதாயம். குறைந்த மழையும் மிகக் குறைந்த அளவு தாவர வளமும் உள்ளது. எ-டு சகாரா.
47. உயிர்ச்சமுதாயம் என்றால் என்ன?
இயற்கையாகத் தோன்றும் உயிர்த்தொகுதி. இதில் வேறுபட்ட உயிரிகள் பொதுச்சூழ்நிலையில் வாழ்பவை.
48. உணவுச் சங்கிலி என்றால் என்ன?
உணவுப் பிணைப்பு. ஓர் இயற்கைச் சமுதாயத்தில் நிலவும் உயிரிகளின் இணைப்பு. இதன்மூலம் உணவு ஆற்றல் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றை மற்றொன்று தின்று அந்நிலைபெறுதல். தாவரங்களை விலங்குகள் உண்ணல். விலங்குகளை மனிதன் கொன்று தின்னல்.
49. இதன் இருவகைகள் யாவை?
1. மேல் உணவுச் சங்கிலி.
2. மட்குணவுச் சங்கிலி.
50. ஒருங்கிணைந்த பண்ணைமுறை என்றால் என்ன?
பயிரிடுவதற்கு உழைப்பு ஆண்டுமுழுதும் பயனுறுவகையில் உண்டாக வழிவகுப்பது. ஒரிசா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வாழ்விகள், சங்கிலி, வறண்ட, யாவை, வறண்டநில