தாவரவியல் :: சூழ்நிலை இயல்

31. சூழ்நிலைத் தொகுதி என்றால் என்ன?
ஒரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றில் இயல் சூழ்நிலைகளுக்கும் இடையே ஏற்படும் வினைத்தொகுதி. இது இயற்கைத் தொகுதி, செயற்கைத் தொகுதி என இருவகை.
32. சூழ்நிலை எல்லை என்றால் என்ன?
பெரும் வரிசையிலுள்ள இரு தாவரக் கூட்டங்களுக்கிடையே உள்ள எல்லை.
33. சூழ்நிலை வகை என்றால் என்ன?
உடலியல் இனம். குறிப்பிட்ட வளரிடத்திலுள்ள ஒர் உயிர் வகையின் தொகை. இது உருவியல் நிலையிலும் உடலியல் நிலையிலும் வேறுபட்டிருக்கும்.
34. மாறுதொகுதி என்றால் என்ன?
அடுத்தடுத்து அமைந்து பெருமளவுக்கு வேறுபடும் தாவரக் கூட்டங்கள்.
35. நீரடி என்பது யாது?
ஒர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்குப்பூஞ்சைகள், மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளறிகள் முதலியவை வாழ்பவை.
36. வாழ்நிலை என்றால் என்ன?
தான்வாழும் கூட்டத்தில் ஒரு விலங்கு அல்லது தாவரத்தின் நிலை.
37. தாவரக்கூட்டங்கள் யாவை?
வேறுபட்ட சூழல்களில் வாழும் தாவரத் தொகுதிகள்.
38. இதன் மூன்று வகைகள் யாவை?
1. நீர் வாழ்விகள்
2. வளநிலவாழ்விகள்
3. வறண்ட நிலவாழ்விகள்.
39. நீர்வாழ்விகளின் வகைகள் யாவை?
1. மிதப்பிகள் - உல்பியா.
2. தொங்கிகள் - பாசிகள்.
3. வேர் ஊன்றிகள் - வேலசினேரியா
4. வேர் மிதப்பிகள் - அல்லி,
5. இருநிலைவாழ்விகள் - நாணல்.
40. வளநில வாழ்விகள் யாவை?
வளநிலத்தில் வாழும் பூவரசு, பலா முதலியவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யாவை, வாழும், தொகுதி