தாவரவியல் :: சூழ்நிலை இயல்
21. சூழ்நிலைப் புரட்சி என்றால் என்ன?
சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம், புகழ்மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடங்கியுள்ளார்.
22. சூழ்நிலைத் தொகுதி என்றால் என்ன?
ஒரிடத்தில் வாழும் உயிரிகளுக்கும் அவற்றின் இயல்பான சூழ்நிலைகளுக்கும் இடையே ஏற்படும் வினைத்தொகுதி. இதில் உயிருள்ளவை உயிரற்றவை ஆகிய இரண்டும் இடம் பெறுகின்றன.
23. சூழ்நிலை வகை என்றால் என்ன?
குறிப்பிட்ட வளரிடத்திலுள்ள ஓர் உயிர்வகையின் தொகை. இஃது உருவியல் நிலையிலும் உடலியல் நிலையிலும் வேறுபட்டிருக்கும்.
24. சூழ்நிலைத் தகைவுப்பொருள்கள் யாவை?
சூழ்நிலை ஏற்புள்ள சேர்பொருள்களை உயவிடுபொருளில் சேர்த்தல்.
25. சூழ்நிலைத் தகைவு முறைகள் என்றால் என்ன?
களை எடுத்தல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை.
26. சூழ்நிலைப்படம் என்றால் என்ன?
மாசுகளை விளக்கும் படம். ஆற்றல் செலுத்துகை ஒருங்கமைப்போடு தொடர்புடையது.
27. சூழ்நிலைத்தகைவுப்பொருள்கள் தன்மைகள் யாவை?
இவை மரபுவழிப் பொருள்களை ஒத்தவை. சூழ்நிலையில் தாக்கம் உண்டாக்கதவை. இலேசான எடையுள்ள பொருள்கள், அரிமான எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியவை.
28. சூழ்நிலைக் கொடுமை என்றால் என்ன?
எதிரிநாட்டின் சூழ்நிலையைக் கெடுத்து, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னலுக்கு ஆளாக்கிப் பொருளாதாரத்தைச் சிதைத்தல், எ-டு. இராக் - குவைத் போரில் அங்குள்ள எண்ணெய் வயல்களுக்கு தீயூட்டியவை.
29. சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள் யாவை?
1. மொத்தநிலப்பரப்பில் 1990இல் காடுகள் 40% 1994 13% 27% அழிந்துள்ளது.
2. ஒவ்வோராண்டும் உலக வெப்ப மண்டலக்காடுகள் 17 மில்லி ஹெக்டேர்கள் அளவில் அழிந்துவருதல்.
3. இந்தியக் காடுகள் ஒவ்வோராண்டும் 28% அளவுக்கு வெட்டப்படுதல்.
4. 22ஆம் நூற்றாண்டிற்கு 60,000 தாவர, விலங்குச் சிறப்பினங்கள் அழியும். இது உலக மொத்தத்தில் 4இல் 1 பங்கு.
30. சூழ்நிலைக் கொடுமையின் வகைகள் யாவை?
1. கிச்சிலிக்காரணி - வேளாண் அழிவுக் காரணி.
2. எண்ணெய் மாசுபாடு - எண்ணெய் வயல்களுக்குத் தீவைத்தல்,
3. அணு மாசுபாடு. அணுக்கழிவுகள்
4. நுண்ணுயிர் மாசுபாடு. நுண்ணுயிர்கள் மூலம் அழிவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யாவை, மாசுபாடு, எண்ணெய், சூழ்நிலை, சூழ்நிலைத்