தாவரவியல் :: சூழ்நிலை இயல்
11. சூழினம் என்றால் என்ன?
இது ஒரு வளரிட வாழ்வி. ஒர் உயிர் வகைத் தொகை.
12. உயிரியல் காரணிகள் என்றால் என்ன?
இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்புகளை உண்டாக்குபவை. இவையாவன.
1. மேய்ச்சல்.
2. ஒட்டி வாழ்விகள்.
3. ஒட்டுண்ணிகள்.
4. கூட்டுயிரிகள்.
5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு.
13. கட்டுப்பாட்டுக் காரணிகள் யாவை?
இவை வெட்டுக்கிளி, பறவை, தவளை முதலியவை. சூழ்நிலைத் தகவும் சிக்கனமுடையதுமான நெல் பண்ணையை உருவாக்க உதவுபவை.
14. நன்னீரியல் என்றால் என்ன?
நன்னீர் அதன் திணைத்தாவரம், விலங்கு ஆகியவைபற்றி ஆராயுந்துறை. சூழ்நிலை இயல் சார்ந்தது. இதில் வாழ்பவை நன்னிர் வாழ்விகள். எ-டு. மீன்கள்.
15. உப்புநீர் என்றால் என்ன?
கடல்நீர் ஆகும். இதில் வாழ்பவை கடல்நீர் வாழ்விகள். எ-டு திமிங்கிலம்.
16. சூழ்நிலைக்கு இணக்கமாதல் என்றால் என்ன?
ஒர் உயிரி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளுதல். இதில் உடல் மாற்றமோ உடலியல் மாற்றமோ வேதிமாற்றமோ இருக்கும். எ-டு. தவளையின் மாரிக்கால உறக்கம்.
17. உயிரிலிச்சூழ்நிலை என்றால் என்ன?
உயிர்களை உக்குவிக்கும் இயல்புக் காரணிகளும் வேதிக்கர்ரணிகளும் ஆகும்.
18. உயிரியல் தொகுதி என்றால் என்ன?
குறிப்பிட்ட பகுதியில் வாழும் குறிப்பிட்ட உயிர்களின் தொகுதி.
19. உயிர்வாழ்பகுதி என்றால் என்ன?
பெருவட்டாரச் சமுதாயங்களில் ஒன்று. தனக்கென்று ஒரு தட்பவெப்பநிலையையும் தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டது. ஒன்று மற்றொன்றாக இணைவது.
எ-டு. துந்திரா, இலையுதிர்காடு, பாலை
20. உயிரியல் துணைத்தொகுதி என்றால் என்ன?
குறிப்பிட்ட பகுதி அல்லது ஊழிக்குரிய திணைத் தாவரங்களும் திணை விலங்குகளும் அடங்கிய தொகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, தொகுதி, குறிப்பிட்ட, இதில், காரணிகள், உயிரியல், வாழ்விகள்