தாவரவியல் :: சூழ்நிலை இயல்

1. சூழ்நிலை இயல் என்றால் என்ன?
தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிற்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது.
2. இச்சொல்லை உருவாக்கியவர் யார்? அவர் கூறும் விளக்கம் என்ன?
1855இல் ரெய்டர் என்னும் விலங்கியலார் இச்சொல்லை உருவாக்கினார்.
3. சூழ்நிலை என்னும் சொல்லுக்கு இரு விலங்கியலார் கூறும் இலக்கணம் என்ன?
"உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள பரிமாற்றம்" - ஹெக்கல்
"சூழ்நிலைத் தொகுப்பின் அமைப்பு, அதன் வேலை ஆகியவை பற்றி அறிவதாகும்" - ஒடம்
4. சூழ்நிலை இயலின் இரு வகைகள் யாவை?
1. தற்சூழ்நிலைஇயல்
2. தொகுசூழ்நிலைஇயல்
5. தற்சூழ்நிலை இயல் என்றால் என்ன?
தற்சூழியல். உயிரிகளின் தனிவகைகளுக்கும் அவற்றின் சூல்நிலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பினை ஆராயும் துறை.
6. தொகுசூழ்நிலை இயல் என்றால் என்ன?
ஓரிடத்தில் தொகுதியாக வாழும் உயிரினக் கூட்டங்களின் அமைப்பு, வளர்ச்சி ஆகியவை பற்றி ஆராயும் சூழ்நிலையலின் ஒரு பிரிவு.
7. தனிவளரியல் என்றால் என்ன?
ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயுந்துறை.
8. வளரியல்பு என்றால் என்ன?
வளருகின்ற தன்மையை ஒட்டித் தாவரங்கள் செடிகள் (கத்தரி), கொடிகள் (அவரை), குற்றுமரங்கள் (மூங்கில்), மரங்கள் (மா) எனப் பலவகைப்படுதல்.
9. வளரிடம் அல்லது வாழிடம் என்றால் என்ன?
உயிரி இயல்பாக வாழுமிடம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இதுவேறுபடும். இது நீர் அல்லது நிலமாக இருக்கலாம்.
10. அளவறி பண்புகள் யாவை?
ஒரு சூழ்நிலைத் தொகுதியிலுள்ள கூட்டத்தில் இயல்புகளை ஆராய்வது. தொகை, செறிவு, அதிர்வெண், மிகுமை, ஓங்கல் ஆகியவை இந்த ஆராய்ச்சியின் ஆய்பொருள்களாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலை இயல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஆகியவை, இயல், சூழ்நிலை