முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » தாவரவியல் » ஒரு விதையிலைத் தாவரக் குடும்பம் - தென்னை
தாவரவியல் :: ஒரு விதையிலைத் தாவரக் குடும்பம் - தென்னை

1. இதன் வளரியல்பு யாது?
தென்னைகள் நிலைத்து வாழ்பவை. தண்டு கிளைக் காதது. நேராக இருக்கும். முடிவில் தழைப்பிலைகள் இருக்கும். வேர்கள் நார்வேர்கள் அல்லது வேற்றிட வேர்கள். தண்டில் மட்டை விழுந்த வடுக்கள் இருக்கும்.
2. இலைகள் எவ்வாறு உள்ளன?
இவற்றை ஒலைகள் என்கிறோம். மட்டையில் நீளமாக ஒன்றுவிட்டு ஒன்று இரண்டு பக்கமும் அமைந்திருக்கும். வலுவான நடுநரம்பு இலையில் உண்டு. இதுவே ஈர்க்கு, மட்டைகளுக்கு அடியில் பாதுகாப்பிற்குப் பன்னாடை
3. பூக்கொத்து எவ்வாறு இருக்கும்?
பெரிய அளவில் இருக்கும். ஒரு மடலில் அமைந்திருக் கும். இதற்குப் பாளை என்று பெயர்.
4. பூக்கள் எவ்வாறு இருக்கும்?
ஒருபால் பூக்கள், ஒரில்லப் பூ, ஈரில்லப்பூ.
5. இதழ்வட்டம் என்றால் என்ன?
புல்லி, அல்லி வேறுபாடு இல்லாதது. 6க்கு மேற்பட்ட மடல்கள் இருக்கும். இரு சுற்றுகளில் அமைந்திருக்கும்.
6. மகரந்தத் தாள்கள் எவ்வாறிருக்கும்?
6 உண்டு. சில சமயங்களில் பல.
7. சூல்பை எவ்வாறு உள்ளது?
மேற்குல்பை. மூன்று கனி இலைகள் உண்டு. பெண்பூவில் மலட்டு மகரந்தத்தாள்கள் இருக்கும்.
8. கனி எப்படிப்பட்டது?
சாற்றுக்கனி அல்லது ஒட்டுக்கனி.
9. மகரந்தச் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது?
காற்றினால் நடைபெறுகிறது.
10. இக்குடும்பத் தாவரங்கள் சிலவற்றைக் கூறுக.
1. தென்னை.
2. பனை,
3. ஈச்சை.
4. பாக்குமரம்.
5. பிரம்புமரம்.
6. சவ்வரிசிப்பனை.
7. தாளிப்பனை.
11. இக்குடும்பத்தின் பொருளாதாரச் சிறப்புகள் யாவை?
1. தென்னையிலிருந்து தேங்காய் கிடைக்கிறது. இதிலிருந்து தேங்காய் எண்ணெய் பெறப்படுகிறது. இதன் ஒலைகள் கீற்றுமுடையப் பயன்படுகிறது. இதன் மட்டையிலிருந்து கயிறு செய்யப்படுகிறது. இதிலிருந்து கள்ளும் இறக்கப்படுகிறது.
2. பனையிலிருந்து பனங்காய், பனைமட்டை பெறப்படுகின்றன. பனங்கள்ளிலிருந்து பதனிர் செய்யப்படுகிறது. இதன்மரம் சாத்துகளாக அறுத்துக் கொட்டகைகள் போடப் பயன்படுகின்றன. பனங்கற்கண்டு, கருப்பட்டி முதலியவை இதிலிருந்து பெறப்படுகின்றன.
3. பிரம்புக் கூடைகள், நாற்காலிகள் பின்னப் பயன்படுபவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு விதையிலைத் தாவரக் குடும்பம் - தென்னை - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இருக்கும், எவ்வாறு, இதிலிருந்து, உண்டு, இதன்