தாவரவியல் :: கண்ணறையும் திசுவும்
51. தோலி என்றால் என்ன?
மேல் தோலினால் சுரக்கப்படும் பாதுகாப்படுக்கு. இது தாவரத்திலும் விலங்கிலும் உண்டு.
52. பட்டை என்றால் என்ன?
நடுமரம், தண்டு, வேர் ஆகிய பகுதிகளைச் சூழ்ந்துள்ள புறவுறை. இதில் முதல் பட்டைத்திசு, இரண்டாம் பட்டைத்திசு, புறணி முதலிய திசுக்களில் காணப்படும். ஒவ்வொரு சிறப்பினத்திற்கும் ஒவ்வொரு வகைப்பட்டை உண்டு.
53. பட்டைவிடல் என்றால் என்ன?
தாவரக்குழாய்த் தொகுதி காயமுறும்பொழுது அதற்குத் துலங்கலாக வளர்திசுவில் வேறுபாடு அடையாத பஞ்சுக்கண்ணறைகள் தோன்றுதல்.
54. அடிநோக்கியது என்பது எதைக்குறிப்பது?
இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை நுனியிலிருந்து அடிநோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று திசு, பின்தோன்றுதிசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்டில் வளர்ப் பிப் போக்குவரவு பொதுவாக அடிநோக்கியே அமையும்.
55. மேல்தோல் என்றால் என்ன?
பாதுகாப்பளிக்கும் தாவரப்புறத்தோல்.
56. அகத்தோல் என்றால் என்ன?
தாவரத்தண்டுகளில் புறணியை மையத்திசுவிலிருந்து எல்லைப்படுத்தும் அணுவடுக்கு.
57. அகக்கலப்பு என்றால் என்ன?
ஒரே தாவரத்திலுள்ள இரு பூக்களுக்கிடையே நடை பெறும் மகரந்தச் சேர்க்கை.
58. ஆண்டு வளையம் என்றால் என்ன?
ஒராண்டில் ஒரு தாவரத்தின் மரக்கட்டையில் சேரும் இரண்டாம் நிலைத்திசுவின் பெருக்கம். இவ்வளையம் மரத்தின் வயதை உறுதி செய்யப் பயன்படும்.
59. வளையத்தடிப்பு என்றால் என்ன?
முன்மரக்குழாய்கள், நுண்கடத்திகள் ஆகியவற்றின் உட்சுவரில் வளைய வளர்ச்சி ஏற்படுவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்