தாவரவியல் :: கண்ணறையும் திசுவும்

31. செல்லுலோஸ் என்றால் என்ன?
பன்மச் சர்க்கரைடு. எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம்.
32. முழுஆக்குதிறன் (totipotency) என்றால் என்ன?
பல உயிரணுக்கள் முதிர்ந்த உயிரியை உண்டாக்கும் எல்லா வகைத் திக்ககளையும் தோற்றுவிக்குந் திறன். ஒவ்வொரு உயிரணுவும் ஒரு சிறப்பினத்தின் முழு மரபணு பொருளைக் கொண்டுள்ளது என்பதை இத்திறன் விளக்குவதாக உள்ளது.
33. வெளிர்க்கணிகம் என்றால் என்ன?
கணிகங்களில் ஒருவகை. பச்சையமோ ஏனைய நிறமியோ இல்லாதது.
34. தாவரத்திசு என்றால் என்ன?
ஒத்த அமைப்பு, தோற்றம், வேலை ஆகியவற்றைக் கொண்ட உயிரணுக்களின் தொகுதி.
35. தாவர உடலிலுள்ள திசுக்கள் யாவை?
1. ஆக்கத்திசு-பசுந்திசு, உணவுச்சேமிப்பு.
2. உரத்திசு - விறைப்பளித்தல்.
3. கடியத்திசு - வலுவளித்தல்.
4. சுரப்பித்திசு - தேன் சுரப்பிகள்.
5. பால்திசு - இலை, தண்டு, வேர் ஆகிய பகுதிகளில் காணப்படுவது.
36. தாவரத் திசுத் தொகுதியின் வகைகள் யாவை?
1. அடிப்படைத்திசு - பஞ்சத்திசு, உரத்திசு, கடியத்திசு.
2. குழாய்த்திசுத்தொகுதி - இதில் குழாய்த் திரள்கள் அடங்கி இருக்கும்.
37. குழாய்த்திசுத் தொகுதியிலுள்ள திசுக்கள் யாவை?
பட்டைத்திசு, மரத்திசு, அடுக்குத்திசு.
38. தாவரத்திசு தொகுதியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது ஏன்?
மனிதத்திசு போன்று அவ்வளவு உயர்நிலை ஆக்கம் படைத்தது அல்ல அவை. ஆகவே, தொகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. தாவர உடலில் திகத்தொகுதிகளும் மனித உடலில் மண்டலங்களும் உள்ளன.
39. அடுக்குத்திசு என்றால் என்ன?
அடுக்குத் திசுவான வளர்திசு. தாவரப்பக்க வளர்ச்சிக்குக் காரணமானது. தண்டிலும் வேரிலும் உள்ளது. மரத்திசு விற்கும் பட்டைத்திசுவிற்கும் இடையிலுள்ளது.
40. மரத்திசுவின் வேலைகள் என்ன?
1. ஊட்டப்பொருள்களைக் கடத்தல்.
2. தாவர உடலுக்குத் தாங்குதல் அளித்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, தாவர